சீனாவுடன் உள்ள எல்லைப் பிரச்சினையை நட்புறவுடன் தீர்க்க வேண்டும் என்ற நேர்மையான நோக்கங்களோடு இந்தியா உள்ளது வேறுபாடுகளை களையை சீனா முன்வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இந்தோ- திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படையின் பட்டாலியன் முகாமை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியவதாது:- "சினோ- இந்தியன் எல்லையை உணர்வுக் காட்சியின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதில் சிலவேறுபாடுகள் உள்ளது. இது தான் எல்லை என்று சீனா சொல்கிறது. இல்லை, இது தான் எல்லை என்று நாம் கூறிவருகிறோம். எல்லைப் பிரச்சினையை தீர்க்க நாம் முயற்சிசெய்து வருகிறோம். அனைத்து பிரச்சினைகளிலும் அமைதியான கூட்டு முடிவையே நாம் விரும்புகிறோம். இதற்கு சீனாவும் முன் வர வேண்டும். எல்லை பரப்பை விரிவாக்க வேண்டும் என்ற கொள்கை இந்தியாவுக்கு கிடையாது. இதை நமது வரலாறும் சொல்கிறது.

பிற நாடுகளை ஒருபோதும் இந்தியா தாக்கியது இல்லை. நாம் அமைதியை பின்பற்றுபவர்கள். சீனா இதை புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து பிரச்சினைகளையும் நேர்மையான முறையிலேயே தீர்க்கவே இந்தியா விரும்புகிறது.

இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவத்து வதற்காக இந்தோ- திபெத்திய எல்லைப்பகுதியில் 35 புதிய நிலைகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 22 எல்லை நிலைகள் விரைவில் செயல்படதுவங்கும். 13 நிலைகள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply