தவற விட்டுவிடுவோமா என்கிற பதற்றம் தொடங்கி நூதனக் கவலை வரை சில நோய்கள் வாழ்க்கைக்கு ஆச்சரியத்தை கூட்டுகின்றன.

"இது கிறுக்குகளுக்காக…
எனில் உலகைத் தங்களால் மாற்ற முடியும் என்று நம்பும் கிறுக்கர்கள்தான் அதை உண்மையில் செய்கிறார்கள்.

இந்த வரிகளை எழுதும் போது தான் இயல்பாக இல்லை என்பதை அறிந்திருப்பாரா ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ்? அவரால் தூசியை சகிக்க முடியாது. சாதாரண எழுத்துப் பிழைகளுக்காக செய்தவர்களை குதறி எடுத்துவிடுவார். தோலில் ஆரஞ்சு நிற பளபளப்பு ஏற்படும் அளவுக்கு கேரட் ஜுஸ் குடித்தார். கண் இமைக்காமல் அடுத்தவரை பார்க்கும் பழக்கம் இருந்தது. வாரம் ஒரு முறை மட்டுமே குளித்தார். மிக அற்புதமான பொருட்களுக்கான தொடர் தேடலில் இருந்த அவர், ஏதாவது சரியில்லை என்றால், அதீதமாக கோபப்படுவார். மிக நவீனமான தொழில் நுட்பத்தையும் 7 பில்லியன் டாலர் தந்த வேலையையும் காற்பனைக்கு எட்டாத புகழையும் கொண்டிருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் ஒருவித ஆபத்தில்லாத மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்படித்தான் சொல்கிறது மன நோய்களுக்குகான பைபிள் என்றழைக்கப்படும் டயக்னஷ்டிக் அண்ட் ஷ்டாடிஷ்டிக்கல் மானுவல்.

இருந்தும் எல்லோருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆக வேண்டும் என்பதுதான் கனவு. ஜாப்ஷின் வழிமுறைகளை பாடமாக நடத்துகிறது தி ஆப்பிள் பல்கலைக்கழகம். ஜாப்ஷை போல இருப்பது எப்படி என்று வகுப்பெடுக்கின்றன கல்வி நிறுவனங்கள். "அடுத்த ஸ்டீவ் ஜாப்ஷாக மாறத் துடிக்கும் ரிஸ்க் எடுக்கத் தயங்காத தொழிலதிபர்களுக்கு" ஆதரவளிக்க வேண்டும் என்று அமெரிக்காவை வற்புறுத்துகிறார் அதன் அதிபர் பாரக் ஒபமா. ஜாப்ஷின் வாழ்க்கையை மங்கலாக்கிய அந்த நோய்தான் – பை போலார் மன நோய் – இப்போது மிக அதிகம் பேரை தாக்கும் மன நோயாகவும் இணையத்தில் அதிகம் தேடப்படும் நோயாகவும் இருக்கிறது. ஹாலிவுட்டில், சிலிக்கன் பள்ளத்தாக்கில், வாழ் ஸ்டிரீட்டில் உள்ள பிரபலங்கள் எல்லாம் இப்போது அந்த நோயுடனான தங்களது போராட்டத்தைப் பற்றி பேசி வருகிறார்கள்.

"பணக்காரனாக, கெட்டவனாக இருக்க வேண்டும்' என்று புருனோ மார்ஷூம் டிராவி மெகாயும் பாடினார்கள். திறமை புதுமையானது. திறமை கவர்ச்சிகரமானது. அதன் வினோதங்கள் யாரையாவது ஜாப்ஸ் போல மிகப் பெரிய வெற்றியாளராக மாற்றுமென்றால் திறமை விருப்பத்தற்குரியது. திறமையை ஆராதிக்கும், மானுட போராட்டங்களின் மகத்துவத்தை மதிக்கும், புதுமையான அனுபவங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் உலகத்தில் மிக அதிகமாக சம்பாதிக்கும் அந்த ஒரு சதவிகித மக்களின் மீதுதான் ஒளி வீசுகிறது. அவர்களுடைய பரபரப்பான பயணம் ஏதாவது நோயுடன் தொடர்புடையது என்றால் அந்த நோயால் பாதிக்கப்படுவது கூட நவீனமானது. அப்படித்தான் பாதிப்பு புதுமையாகிறது. அப்படித்தான் நாகரிக நோய்கள் பிறக்கின்றன.

நாகரிகமா, தரவா?
விளக்க முடியாத மிக பலவீனமான அறிகுறிகளுடன் தன்னைப் பார்க்க வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றி கவலைப்படுகிறார் கொல்கொத்தாவைச் சேர்ந்த மனநல மருத்துவர் அனிருத்தா தேப். "அவர்களுக்கு தெரிந்த நோய்களைப் பற்றி இணையத்தில் தேடுகிறார்கள். சொந்தமாக ஏதோ சுய மருத்துவம் செய்துகொள்கிறார்கள். உண்மையில் இருப்பதைவிட தங்களுக்கு அதிக பிரச்சனை இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்" என்று சொல்கிறார் அவர். "உணர்வுகளில் ஏதாவது சில மாற்றம் வந்தால், தூக்கமின்மை இருந்தால், மன அழுத்தம் இருந்தால் தங்களுக்கு பைபோலார் மன நோய் அல்லது தூக்கம் தொடர்பான நோய் இருக்கிறதா என கேட்கிறார்கள். எல்லோருக்கும் சிகிச்சை தேவைப்படுகிறது" என்கிறார்.

நோய்கள் உடல் சார்ந்தவை மாட்டுமல்ல. அவற்றுக்கு ஒரு பிடிபடாத கலாச்சாரத்தன்மையும் உண்டு. நாம் நாகரிகத்தை ஏற்றுக் கொள்வது போல அது உங்களைக் கவரும் நபர்களை பின்தொடற்கிறீர்கள். அவர்களிடம் புதுமையாக என்ன இருக்கிறது என்பதை அறியத் துடிக்கிறீங்கள். "நாகரிகம் என்பது அழகுணர்வு, நாடகம், பொருள் எல்லாம்" என்கிறார் ஆடை வடிவமைப்பாளர் சுனீத் வர்மா. அது தனித்துவம் பற்றியதும் பிரத்யேகமானதும் கூட. "என்னைப் பொறுத்தவரையில் நாகரிகம் என்பது பாலியல் உறவு பற்றிப் பேச மென்மையான ஒரு வழி" என்கிறார் வர்மா.

சிஇஒ நோய்
மூலையில் உள்ள சம நிலையற்ற தன்மையால் வெற்றி பெறுபவர்களை இப்போதெல்லாம் மனநல மருத்துவர்கள் அடிக்கடி பார்க்க நேரிடுகிறது. ஹைபோமேனியா என்று சொல்லப்படும் உணர்வு சார்ந்த நோய் அது. பைபோலார் போல ஆபத்தான நோய் அல்ல இது (பைபோலார் நோயாளிகளில் 10 முதல் 20 சதவிகிதம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்). இதனால் செயல்பாடுகளில் பிரச்சனை வராது. ஹைபோமேனியா நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் மிக அதிகமான தன்னம்பிக்கை இருக்கும். மிக குறைவாக தூங்குவார்கள். மிகப் பெரிய எண்ணங்கள் இருக்கும். அதீத உற்சாகம் இருக்கும் என்கிறார் எய்ம்ஸ் தில்லியின் பேராசிரியர் மருத்துவர் ராஜேஷ் சாகர். புதுமைக்கும் வெற்றிக்குமான அவகளது வேட்கை அவர்களை மிகச் சிறந்த சிஇஒக்கலாக்குகிறது. ஆனால் அதன் கடுமையான நிலையில் ஹைபோமேனியா மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். நீதிக்கான தன்மையை, கட்டுபாட்டை இழக்க நேரிடும். "குடும்ப உறுப்பினர்களோ நண்பர்களோ நடவடிக்கைகளில் மாற்றத்தை கவனிக்காத வரையில் அவர்கள் மருத்துவ உதவியைக்கூட பொதுவாக நாடுவதில்லை" என்கிறார் சாகர். மிக ஆபத்தான அணுகுமுறையையும் அவர்களிடம் பார்க்கலாம்.

மிக ஆபத்தாக வண்டி ஓட்டுவது, பணத்தை கணக்கில்லாமல் செலவழிப்பது, தூக்கமில்லாமல் இருப்பது, ஒரு திட்டத்திலிருந்து இன்னொரு திட்டத்துக்கு மிக வேகமாக மாறுவது, அதிகமான பாலியல் செயல்பாடுகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். "ஐந்து சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிப்படைந்திருக்கிறார்கள். உண்மையில் இதைவிட அதிகம் பேர் இருப்பார்கள். பதிக்கப்பட்ட நிறைய பேருக்கு நோய் இருப்பதே தெரியவில்லை".

நூதன கவலை
தேசமெங்கும் தொடக்க விழா ஜுரம் பரவுகிறது. சீனாவுக்குப் பிறகு மிகப் பெரிய தொழில்நுட்ப சந்தை இந்தியாவுடையது. வருடந்தோறும் 800 புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. இதன் பொருள் அவர்கள் நினைத்த வெற்றியைப் பெற முடியாமல் போகக் கூடும் என்ற கவலைகளுக்கு இரவுகளை தின்னக் கொடுத்து விழித்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் லட்சியத்தின் கருப்பு பக்கம் அது. திறமை வாய்ந்தவர்கள், தங்களைப் பற்றிய அதீதமான கற்பனை கொண்டவர்கள் ஆனால் பயணத்தை ரசிப்பதற்கு பதில் பயப்படுகிறார்கள். தங்களது தொழில்நுட்பம் காலாவதியாகிவிடுமா, அதைவிட சிறந்ததை யாராவது தந்துவிடுவார்களா, அதை திருடிவிடுவார்களா போன்ற கோள்விகள் அவர்களை அலைக்கழிக்கின்றன. இந்த இளம் சமூகம் தாக்கப்பட்டிருப்பது நூதன கவலை நோயால் என்பது தான் புதுமை.

தவறவிடும் பயம்
அதற்கு எந்த அடிப்படையும் இல்லை; ஆனால் ஏதோ நடந்துகொண்டிருக்கிறது அதை தவரவிட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிற பயம் விடவே விடாது. தவறவிட்டு விடுவோம் என்கிற பயம் தான் புத்தம் புதிய மனநோய். தம்மைவிட மற்றவர்கள் அனுபவித்துவிடுவார்களோ என்கிற பயத்தால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பேஷ்புக், ட்விட்டர், ஸ்மார்ட் போன் எல்லாவற்றிலும் தொடர்பில் இருப்பார்கள். "நமது இளைஞர்கள் எந்த அளவுக்கு அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதை இது போன்ற சமூக கவலைகள் காட்டுகின்றன" என்கிறார் பெங்களூருவில் உள்ள பையலா சிக்கல் சயின்சஷின் தேசிய கவுன்சிலில் நரம்பு உயிரியல் வல்லுனராக இருக்கும் சுமந்திரா சாட்டர்ஜி. 'சமூக வலைத்தளங்களில் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம் தொடர்பில் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களிடத்தில் ஒரு சமூக புறக்கணிப்பும் மனநோயும் தான் இருக்கின்றன."

இயல்பு நிலை பிரச்சனையில் சிக்கியிருக்கிறது. நமது சமூகம் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறதா? அல்லது நாம் அதீதமாக யோசிக்கிறோமா? எப்படியிருந்தாலும் நாகரிக நோய்களையும் அதற்கு நவீன உலகின் எதிர்விளைவுகளையும் கவனிப்பது சுவாரஷ்யமானது. நமது பாதிப்புகளில் ஏதாவது பொருள் இருந்தால் சரி.

நன்றி : இந்தியா டுடே

Tags:

Leave a Reply