மகாத்மா காந்தி நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

1948ம் ஆண்டு இந்த நாளில் காந்தி படுகொலை செய்யப் பட்டார். நாட்டுக்காக உயிர் நீத்த அனைவரையும் நினைவுகொள்ளும் விதமாக இன்று தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுவதோடு நாடுமுழுவதும் இன்று காலை 11மணிக்கு 2 நிமிடம் மெளண அஞ்சலி செலுத்தப்படுகிறது.

தியாகிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேசப்பிதா மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நம் நாட்டிற்காக உயிர்நீத்த ஒவ்வொருவருக்கும் நாம் அஞ்சலி செலுத்து வோம். அவர்களின் வீரம் மற்றும் தைரியம் எப்போதும் நம்மை ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply