மேக் இன் இந்தியா திட்டத்தை தொடர்ந்து ரீடு இந்தியா என்ற புதியதிட்டத்தை தொடங்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. கிராமங்கள் தத்தெடுக்கும் திட்டம் உட்பட பிரதமரின் கனவாக உள்ள பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வரும் மத்திய அரசு அந்த வரிசையில் ரீடு இந்தியா என்ற திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பிராதான் மந்திரி ஆதர்ஷ்யோஜனா திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் புதிதாக நூலகங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து தரப்பு மக்களையும், சிறந்த நூல்கள் சென்றடையும் வகையில் செயல் திட்டத்தை வகுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்தை அடுத்த மாதம் 14-ம் தேதி காதலர் தினம் முதல் நடை முறைக்கு கொண்டு வர உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதற்கான நிதி ஆதாரங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

Tags:

Leave a Reply