பிரதமர் நரேந்திர மோடி மிகவும் எளிமையானவர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஒபாமாவுடனான சந்திப்பின் போது நரேந்திர தாமோதர தாஸ் என்று தனது பெயர் பொரிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் பிரதமர் நரேந்திரமோடி.

அந்த பிரத்யேக ஆடையை தயாரிக்க ரூ.10 லட்சம் செலவானதாக எதிர்க் கட்சிகள் சில சர்ச்சையை கிளப்பின.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

அவர் ஒரு அயல்நாட்டுத் தலைவர் வரும் போது எப்படி தனது தோற்றத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமோ அவ்வாறே அமைத்து கொண்டார்.

உண்மை தெரியாமல், மோடியின் சூட்தயாரிக்க லட்சக் கணக்கில் செலவானதாக சிலர் விமர்சிக்கின்றனர். உண்மையில் மோடி மிகவும் எளிமை யானவர். மேலும், இயல்பாக ஒரு சூட்தயாரிக்க என்ன செலவாகும் என்பது எல்லாருக்குமே தெரியும் என்றே நினைக்கிறேன்" என்றார்.

Leave a Reply