வேற்றுமை போற்றப்பட வேண்டும், மதரீதியான வேறுபாட்டுக்கு யாரையும் ஆளாக்காமல், எல்லோருடனும் இணைந்து வாழ வேண்டும்'' என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்,மேலும் கூறியதாவது ''எல்லா சமுதாய மக்களுடனும் இணைந்து வாழவேண்டும்'' வேற்றுமை போற்றப்பட வேண்டும். அதை எதிர்க்கக்கூடாது. பலதரப்பட்ட பாரம்பரியம், வழிபாடுகளை பின்பற்றும் மக்களை மதரீதியான வேறுபாட்டுக்கு ஆளாக்கக் கூடாது. எல்லோருடனும் நாம் இணைந்து வாழவேண்டும்.

இந்த பிரபஞ்சம் பல வேறுபட்ட பகுதிகள் அல்ல. ஒரே உயிர்ப் பொருள்தான். ஒவ்வொருவரும் மற்றவர் நலனில் அக்கறைசெலுத்தி நலமுடன் வாழவேண்டும். பலதரப்பட்ட மக்கள், சகிப்பு தன்மையுடன் ஒன்றாக இணைந்து வாழவேண்டும். அதைத் தான் நமது பாரம்பரியம் கூறுகிறது. பல பாரம்பரியங்கள் வெவ்வேறாக தோன்றலாம். ஆனால் எல்லாமே ஒன்றுதான். இதுதான் நிரந்தர உண்மை.இவ்வாறு மோகன்பகவத் கூறினார்.

Leave a Reply