லோக் சபா, சட்ட சபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம்கொடுப்பதை கட்டுப்படுத்த சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல்ஆணையம் பரிந்துரை செய்தது.

இதனையடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பவர்களுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் குற்றவியல் சட்டத்தை திருத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. சட்டதிருத்த மசோதாவை தயாரிக்கும்படி சட்ட அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் மசோதா தயாரானால் பட்ஜெட் கூட்டத் தொடரில், இந்த மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply