டெல்லி சட்ட சபைத் தேர்தலில் பாஜக.,வின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ள கிரண் பேடியின் கிருஷ்ணாநகர் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் மர்மநபர்கள் சிலர் நேற்றுமாலை புகுந்து சூறையாடி தொண்டர்களை தாக்கியுள்ளனர்.

கிருஷ்ணா நகர் தொகுதியில் உள்ள கிரண்பேடியின் தேர்தல் அலுவலகத்தின் உள்ளே, திங்கள் கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர் திடீரென உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். அலுவலகத்தில் இருந்தமேஜை, கண்ணாடிகள் ஆகியவை அடித்து நொறுக்கப் பட்டது.

மேலும், அலுவலகத்தில் இருந்த பாஜக தொண்டர்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த நபர்களுக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. தகவலறிந்ததும் கிரண்பேடி தனது பிரசாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு தாக்குதல் நடத்தப்பட்ட தனது அலுவலகத்துக்கு விரைந்தார். அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாஜக.,வினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

இத்தாக்குதலுக்கு டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத் யாய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இத்தாக்குதலில் ஆம் ஆத்மி ஆர்வலர்கள் ஈடு பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்படும் முன்புவரை டெல்லியில் இது போன்ற சம்பவங்கள் நடந்த தில்லை. ஆனால், தற்போது மோசமான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கருத்தில்கொண்டு டெல்லி மக்கள், ஆம் ஆத்மியை நிராகரிக்க வேண்டும்' என்றார்.

Leave a Reply