ஆம் ஆத்மிக்கு போலியான நிறுவனத்திடமிருந்து ஹவாலா முறையில் நன் கொடை வந்துள்ளதாகவும், வரி செலுத்துவதை தவிர்க்கும் விதத்தில் , இந்த முறைகேடு நடந்துள்ளதாகவும், அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

ஆம் ஆத்மியிலிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்கள் ஆம்ஆத்மி தன்னார்வ அமைப்பு என்றபெயரில் இயங்கி வருகின்றனர். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ஆம் ஆத்மி நிர்வாகிகள் வரிசெலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக சில முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்தாண்டு ஆம் ஆத்மிக்கு, நன்கொடை கொடுத்த நிறுவனத்தை பற்றி விசாரிக்கும்போது, அந்தநிறுவனத்துக்கு எந்தவித வருமானமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. எந்த ஒரு வர்த்தக நடவடிக்கைகளிலும் இந்நிறுவனம் ஈடுபடவில்லை. இப்படிப்பட்ட ஒருநிறுவனம் எப்படி நன்கொடை கொடுத்திருக்க முடியும்?

ஆம் ஆத்மிக்கு நன்கொடை கொடுத்தவர் 11 நிறுவனங்களுக்கு இயக்குநராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் வசிப்பதாக கூறப்படும் முகவரியில், ஒரு பாழடைந்த வீடுதான் உள்ளது. ஆம் ஆத்மியின் இந்த முறைகேடு குறித்து சட்டப் பூர்வ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். ஆம் ஆத்மிக்கு கோல்மைன் பில்ட் காம் பி லிட், இன்போலான்ஸ் சாப்ட்வேர் சொல்யூசன் லிட், சன் விசன் ஏஜென்சி மற்றும் ஸ்கை லைன் இரும்பு மற்றும் உருக்கு பி லிட் உள்ளிட்ட பெயரில் நன்கொடை வந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

Leave a Reply