நேர்மையின்மை மற்றும் பொய் வாக்குறுதிகள் மூலம் டெல்லியை நடத்த ஆம் ஆத்மி கட்சி முற்படுகிறதா என்று பிரதமர் நரேந்திரமோடி கேள்வி எழுப்பியுள்ளார் .

டெல்லி சட்ட சபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.,வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி ரோஹினி பகுதியில் பிரசாரம்செய்தார். அவர் பேசியதாவது: எம்.பி., தேர்தலின்போது குஜராத்தை தவிர வேறு எங்கையும் மோடியை தெரியாது என்றபேச்சு இருந்தது. அதை உடைத்து

என்னை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வைத்த பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்தால் அனைத்து துறை களிலும் வளர்ச்சி இருக்கும். டெல்லிக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் தேவை. வாக்காளர்களை யாரும் முட்டாள் ஆக்கமுடியாது. உங்கள் கனவுகள் என்னுடைய கனவுகள். காங்கிரஸ் கடந்த 15 ஆண்டுகளாகவும், ஆம் ஆத்மி கட்சியினர் கடந்த ஓராண்டு ஆட்சியிலும் டெல்லியை பாழாக்கி விட்டனர். உங்கள் பிரச்சினையை சரிசெய்வது எனது பொறுப்பு. தவறுகளை நாடு மன்னிக்கும். நம்பிக்கை துரோகத்தை ஏற்றுக்கொள்ளாது. சாதுர்யம் உங்களை நீண்டநாள் கொண்டு செல்லாது.

பாஜக மீதும் காங்கிரஸ் மீதும் அனைத்து வகையிலான குற்றச் சாட்டுக்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி சுமத்தியுள்ளது. ஆனால் இப்போது உண்மை வெளிப்பட்டுவிட்டது" என்று தெரிவித்தார்.

Leave a Reply