நாட்டின் புதிய உள்துறை செயலாளராக ஊரகவளர்ச்சி துறை செயலாளராக இருந்த எல்.சி. கோயல் நியமிக்கப் பட்டுள்ளார். உள்துறை செயலராக இருந்த அனில் கோஸ்வாமி நேற்று இரவு நீக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு எல்.சி. கோயலை அந்த இடத்துக்கு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

சாரதா நிதிநிறுவன மோசடி தொடர்பாக அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மதாங்சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப் பட்டார். அவரை சிபிஐ. கைது செய்வதை உள்துறை செயலாளராக இருந்த அனில் கோஸ்வாமி தடுத்துள்ளார்.

இதுதொடர்பாக உள் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விசாரணை நடத்தினார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜ் நாத் சிங் கலந்து ஆலோசனை நடத்திய பின் உள்துறை செயலர் பொறுப் பிலிருந்து, அனில் கோஸ்வாமி நேற்று இரவு அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஊரகவளர்ச்சி துறையில் செயலராக இருந்த எல்.சி. கோயல் புதிய உள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply