குஜராத் மாநில முதல்வராக பிரதமர் நரேந்திர மோடி இருந்த போது அவரது செயல்பாடுகளை நான் கவனமாக கவனித்த வந்துள்ளேன். குஜராத்தில் நிறைவேற்றப்பட்ட பல சிறந்த திட்டங்களை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண நிர்வாகம் கற்றுக் கொண்டுள்ளது குஜராத் முதல்வராக

நரேந்திரமோடி மேற்கொண்ட நடவடிக்கைகளை மாநிலங்கள் பின்பற்றவேண்டும் என்று பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகரும், அமெரிக்காவின் கலிஃ போர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வாஷ்னேகர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, புது தில்லியில் வியாழக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: குஜராத் மாநிலம், இந்தியாவின் கலிஃ போர்னியாவாக உள்ளது. மோடி இந்தமாநிலத்துக்கு நற்பணிகளை செய்துள்ளார். பருவநிலை மாறு பாடு தொடர்பாக குஜராத் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டுகிறேன்.

இந்த ஆண்டு இறுதியில் பாரீஸ் நகரத்தில் நடக்கவிருக்கும் ஐ.நா. பருவநிலை மாறுபாடு தொடர்பான பேச்சு வார்த்தைகளில் மோடி தலைமையிலான இந்திய அரசு முக்கியப் பங்காற்றும் என்று நம்புகிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் 100 ஜிகாவாட் சூரிய மின் சக்தியை உற்பத்திசெய்ய இந்தியா இலக்கு நிர்ணயம் செய்திருப்பது பாராட்டுக்குரியது குஜராத் மாநிலத்தைப் பார்த்து அமெரிக்காவின் கலிபோர்னியா நிறையேக் கற்றுக் கொண்டது என்று அர்னால்டு பேசினார்.

Leave a Reply