ஜோர்டான் நாட்டு விமானியை உயிரோடு கொடூரமாக எரித்துக் கொலைசெய்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அறிவற்ற செயலுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலுக்கு உலக நாடுகள் ஒருங்கிணைந்து உறுதியான பதில் அளிக்கவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜோர்டான் நாட்டு மன்னர் அப்துல்லா-II இப்ன் அல்-ஹுசைனுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள கடிதத்தில் இந்த முரட்டுத் தனமான கொலை குறித்து அறிந்ததும் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன் . இந்த கொடூரசம்பவம், தீவிரவாதத்தின் அச்சுறுத்தலும் கொடூரமும் கடினமான சவாலாக இன்னும்தொடருகிறது என்பதை நினைவூட்டும் அப்பட்டமான செயல் ஆகும். தீவிரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த மற்றும் தொடர்ச்சியான உலகளாவிய பதில்நடவடிக்கை வேண்டும். இதுபோன்ற அறிவற்ற கோழைத்தனமான செயல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த துயரமானநேரத்தில், இழப்புக்குள்ளான குடும்பத்தினருடனும் ஜோர்டான் அரசுடனும் இந்தியா துணை நிற்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்தவாரம், ஜோர்டான் போர் விமானி மூவாத் அல் கசாஸ் பேயை தீவிரவாதிகள் ஈவிரக்கமின்றி ஒரு உலோக கூண்டில் அடைத்துவைத்து உயிரோடு எரித்து கொன்றனர். இதுதொடர்பாக இப்போது வெளியான வீடியோ, ஜோர்டானில் பெரும்பதற்றத்தை ஏற்படுத்தியது. போராட்டங்களுக்கும் வழிவகுத்தது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இந்தகொடூர செயலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர் .

Leave a Reply