நரேந்திர மோடி மற்றும் பாரக் ஒபாமா இடையிலான சகோதரத்துவ உறவு உலகின் மிகப் பெரிய மற்றும் மிகப் பழைய ஜனநாயகங்களுக்கிடையிலான உறவுகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

நானும் பார்க்கும் இந்த வாசகத்துக்குப் பின்னால் குட்டி வரலாறு ஒன்று உள்ளது. பிரிஸ்பேனில் நடைபெற்ற ஜி 20 சந்திப்பில் ஆஷ்திரேலிய பிரதமர் டோனி அபோட் எல்லாத் தலைவர்களையும் மற்றவரை அவர்களின் முதல் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும் என்கிற ஐடியாவை முன்வைத்தார். அதைப் பிரிஸ்பேன் நகரிலேயே முயற்சி செய்து பார்க்கவும் மற்ற தலைவர்களைக் கேட்டுக்கொண்டார். டோனி அபோட்டே பிரதமர் நரேந்திர மோடியை, 'நரேந்திரா' என்று அழைத்த முதல் உலகத் தலைவர். அந்த ஐடியா மோடிக்குப் பிடித்துவிட்டது. அதற்குப் பின்னரே விளாடிமர், டேவிட், டோனி, ஜின் பின் என்று ரஷ்ய, பீட்டன், ஆஷ்திரேலிய, சீனத் தலைவர்களை அவர் அழைக்க ஆரம்பித்தார்.

இந்தப் பழக்கத்தை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமவுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களில் தொடர்ந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அமெரிக்க அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் மோடி தன்னை 'நரேந்திரா' என்று அழைப்பதையே விரும்புகிறாரா என்று உறுதிப்படுத்திக் கொண்டார்கள். காரணம் ஒபாமாவுக்கு நரேந்திரா என்று உச்சரிக்கச் சிரமமாக இருந்தது. 'மோடி' என்று அழைத்தாலும் சிக்கல் இல்லை என ஒத்துக்கொண்டார்கள். இப்படித்தான் மோடியின் பாணி, வழிகள் ஆகியவற்றுக்குப் பழகிக்கொண்டு உரையாடல்களைத் தொடர்ந்தார். ஒபாமா, கற்றறிந்த, அமைதியான பிரதமர் மன்மோகன் சிங், ராஜதந்திரி அடல் பிகாரி வாஜ்பாயி ஆகியோரிடம் இருந்து மாறுபட்ட ஒரு பிரதமரையே வாஷிங்டன் எதிர்கொண்டது. மன்மோகன் சிங் எப்பொழுதாவது தான் தானாக ஒபாமாவை போனில் அழைப்பார். ஆனால் மோடியோ பிரிஸ்பேன், நாபை தவ் நகர்களில் பேசியது போக இரண்டு முறை தானே ஒபாமாவுக்குப் போன் செய்து முடிவுகளை எட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார். ஒபாமாவின் வருகைக்கு முன்னரே 'பெண்சக்தி' என்கிற தலைப்பை அணிவகுப்பின் பொருளாகத் தேர்வு செய்தது. கூட்டாக வானொலியில் இணைந்து பேசும் 'மான் கி பாத்' நிகழ்வுக்குத் திட்டமிட்டது என்று மோடி கச்சிதம் காட்டினார்.

இதற்கு ஏதேனும் ஆதாரம் வேண்டும் என்றால், ஒபாமா புது தில்லியில் இருந்த ஐம்பத்தி இரண்டுமணி நேரத்தில் ஆறு வருட அணுப் பொறுப்புணர்வு சிக்கல் தீர்க்கப்பட்டது. பாதுகாப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டது, பருவநிலை மாறுபாடு பற்றிய விஷயம் இப்போதைக்குத் தள்ளி வைக்கப்பட்டது. அதோடு மிக முக்கியமாக ஆசியாவுக்கான புவியியல் பாதுகாப்புக் கண்ணோட்டம் வெளியிடப்பட்டது.

ஒபாமாவைக் குடியரசு தின சிறப்பு விருந்தினராக அழைத்ததே ஒரு சதியோ என்று எண்ணியவர்களுக்கு மோடி – ஒபாமா கூட்டணி மேலும் ஆச்சரியங்களை வைத்திருந்தது. இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவில் மிகப்பெரிய முன்னெடுப்பை எடுத்து இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் அது வெற்றி பெற்றால் மோடியின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உதவவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த மாற்றத்துக்கான விதைகள் மோடி வெற்றி பெற்றதும் அமெரிக்கா சென்று, நியூயார்க், வாஷிங்டனில் கம்பீர அறிவுப்புகளை மேற்கொண்டபோது விதிக்கப்பட்டது.

அமெரிக்காவும் மோடியுடன் சேர்ந்து சாதிப்போம் என்கிற வாக்குறுதியை சோதிக்க முடிவு செய்தது. உலக வர்த்தக அமைப்பில் ஏற்பட்ட முட்டுக்கட்டையைச் சரி செய்வதே அது. மோடி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியிடம் ஜூலை மாதத்தில் அமெரிக்கா இந்தியாவின் விவசாய மானியங்களில் கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தால் இந்தியா வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தத்தில் தலையிடமாட்டோம் என்று உறுதி தந்தார்.

இவை இரு நாடுகளுக்கு இடையே தொடர்ச்சியான பேச்சுவார்த்தைக்கு வழி வகுத்தது. ஒபாமா அணுப் பொறுப்புணர்வு விஷயத்தையும் பாதுகாப்புத் துறையில் இணைந்து பணியாற்றுவதில் உள்ள தேக்கத்தையும் குறிப்பாக பாதுகாப்பு வர்த்தக, தொழில்நுட்ப முன்னெடுப்பில் உள்ள சிக்கல்களையும் கடந்த செப்டம்பரில் மோடியோடு தீவிரமாக விவாதித்தார். ஒவ்வொரு துறையிலும் தொழிலும் இந்தியா அமெரிக்காவோடு இணைந்து பணியாற்றும் என்பது அணு சக்திக்கும் பொருந்தும் என்ற மோடி, அதே சமயம் அணு ஒப்பந்த சேதாரப் பொறுப்புணர்வு சட்டத்தைத் தன்னால் திருத்தியமைக்க முடியாது என்று தெளிவுபடுத்தினார். அதே சமயம், உலகளவில் அணு விபத்து பொறுப்புணர்வை நிர்வகிக்கும் வியன்னா மாநாட்டு அணுசக்தி சேதார கூடுதல் இழப்பீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் பக்கம் இந்தியா நிற்கும் என்று உறுதியளித்தார்.

திறந்துவிடப்பட்ட பொறுப்புணர்வு
அமெரிக்க பாணியில் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் மோடி ஆர்வம் காட்டுகிறார். ஆனால் தன்னுடைய நிபந்தனைகளுக்கு அவர்கள் ஒத்துக்கொண்டால் மட்டுமே அவர் ஒப்பந்தங்களுக்குத் தயாராக உள்ளார். மன்மோகன் அரசில் அணு சக்தி ஒப்பந்தம் முதலிய முக்கிய ஒப்பந்தங்கள் ஒரு காலத்துக்குப் பிறகு தேங்கிப் போனதை அமெரிக்கா கடுப்போடு நினைவில் கொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக அணு உலையில் விபத்து ஏற்பட்டால் தொழில்நுட்பத்தை வழங்கும் நாடும் நஷ்ட ஈடு வழங்கும் பொறுப்புள்ளது என்று இந்தியா சொன்னால் தாங்கள் வழங்கும் அணு சார்ந்த பொருட்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன. என்பதைக் கண்காணிக்க உரிமை வேண்டும் என்று அமெரிக்கா முரண்டு பிடித்தது. பட்ட காலிலேயே படும் என்பதுபோல ஜப்பான் பயணமாக கடந்த ஆண்டு மோடி டோக்கியோ போன போது இதையே ஜப்பானும் வலியுறுத்தியது.

ஆகவே இது விஷயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் இணைத்து மோடி ஒரு குழுவை உருவாக்கினார். இதில் இரு அமெரிக்க நிறுவனங்களான ஷூடு, வெஷடிங் ஹவுஸ் உடன் இந்திய சட்ட அமைச்சகம், தேசிய அணு சக்தி நிறுவனம், அணு சக்தித் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் இணைக்கப்பட்டார்கள். மூன்று முறை டெல்லி, வியன்னா, லண்டனில் இவை சந்தித்து முடிவு எட்டின. ஒபாமா தன்னுடைய அதிகாரிகளை உடன்படிக்கை ஏற்படாமல் வெளியேறக் கூடாது என்றதும் உடன்படிக்கையைச் சாதித்து உள்ளது. இந்த உடன்படிக்கையின் முக்கியத் தகவல்கலை இந்தியா டுடே பிரத்யேகமாக அதன் வாசகர்களுக்குத் தருகிறது:

விநியோகம் செய்பவரின் பொறுப்புணர்வு (பிரிவு 17பி)
இந்தியா ஆபத்து மேலாண்மைப் பரிந்துரை ஒன்றை இந்திய அணு சக்தி துறை, பொதுக் காப்பீட்டு நிறுவனம் தலைமையேற்ற இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆய்வின் அடிப்படையில் சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் அணு தொழில்நுட்பம் வழங்கும் நிறுவனம் தரவேண்டிய இழப்பீடு எப்பொழுதும் அணு உலையை இயக்கும் நிறுவனத்தின் இழப்பீட்டு எல்லையான ரூ.1,500 கோடியைத் தாண்டாது என்றும் உறுதி தந்தது. இந்த எல்லையை இந்திய நிறுவனங்கள் ஒரு சமயத்தில் அதிகபட்சம் ஒரு அணு உலையே விபத்துக்குள்ளாகும் என்கிற கருத்தின் அடிப்படையில் உருவாக்கியுள்ளன. இரண்டு நிலைகளில் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்திய அணு சக்தி நிறுவனம் அதிகபட்ச ப்ரீமியம் தொகையாக வருடத்துக்கு 90 கோடியை செலுத்தும. அணு உலைக்குத் தொழில்நுட்பம் வழங்கும் ஷூடு, வெஷ்டிங் ஹவுஸ் முதலிய நிறுவனங்கள் இரண்டாம் நிலையில் 13 கோடியை செலுத்தும்.

விநியோகம் செய்பவர் வரையறை
தொழில்நுட்பத்தை விநியோகிப்பவர், அதைச் செயல்படுத்துபவர் என்று இரண்டுக்கும் இடையே வேறுபாட்டை வரையறுக்க முடிவு செய்யப்பட்டது. அணு உலையை இயக்கும் அமைப்பு வடிவமைப்பு, பொருள் ஆகியவற்றை தேவையான தொழில்நுட்ப குறிப்புகளோடு தந்ததும் அதை வாங்கிச் செயல்படுத்தும் நிறுவனம் விநியோகஸ்தர் என்று கருதப்படாமல் செயல்படுத்துபவர் என்கிற பெயரால் அழைக்கப்படும். இவர்கள் நஷ்ட ஈடு தரவேண்டியது இல்லை. இந்தநாள் பெரும்பாலான தேசிய அணு சக்தி நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் நஷ்ட ஈட்டு எல்லைக்குள் வராது.
சட்டரீதியான நடவடிக்கை எடுத்தல் (பிரிவு 46)
இந்தப் பிரிவு குறிப்பாக பொறுப்புணர்வு சட்டத்தைத் தாண்டி மற்ற சட்டங்களின் மூலமும் வழக்குத் தொடுக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தது இது அமெரிக்க நிறுவனங்களுக்கு கவலை தருகிற அம்சமாக இருந்தது. இந்தப் பிரிவை அமெரிக்க நிறுவனங்களையும் கோர்ட்டுக்கு இழுக்கப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர்கள் கருதினார்கள். இதற்கு ஆதாரமாக, விநியோகஸ்தர் என்கிற வார்த்தையை இந்தச் சட்டப்பிரிவில் சேர்க்க முயன்ற திருத்தம் தோற்கடிக்கப்பட்டது முன்வைக்கப்பட்டது. முன்னாள் அட்டர்னி ஜெனரல் குலாம் வாகன்வதி அணு உலையை இயக்குபவர் மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு அறிக்கை தந்தார்.

எனினும் அமெரிக்கா இந்தக் காப்பீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதோடு தாங்கள் இழப்பீடு தருவதற்கான தேவை முடிந்துவிட்டது என்கிற உறுதியை எதிர் பார்த்தது. இதை ஒட்டி உறுதிப்பாடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் கொண்டுவரலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தப் புரிந்துணர்வில் கீழ்க்கண்ட உறுதிப்பாடுகள் இருக்கும்:

இந்தச் சட்டத்தின் முகப்புரை இச்சட்டம் 'அணு உலையை இயக்குபவர் மேற்கொள்ளும் நிறுவனம் தவறு செய்யாமல் இயங்குவதை உறுதி செய்ய நஷ்ட ஈட்டை முன்வைக்கிறது' என்று குறிப்பிடுகிறது. இதில் தொழில் நுட்ப விநியோகம் செய்பவர்கள் பற்றிக் குறிப்பிடவில்லை.

இந்தியச் சட்ட அமைச்சகம் இந்திய உச்ச நீதிமன்ற முகப்புரைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விளக்கி வழக்குகளை ஆதாரமாகக் காட்டியது. முகப்புரையை கொண்டே ஒரு சட்டத்தை நீதிமன்றம் வரையறுக்கும் என்பதை வாதிட்டார்கள். இதனால் பிரிவு 46 அமெரிக்க நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று உறுதி தந்ததோடு இந்த வழக்குகள், வாதங்களைப் புரிந்துணார்வு ஒப்பந்தத்தில் இணைக்கச் சம்மதித்து உள்ளார்கள்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இரண்டாம் பகுதியில் வெவ்வேறு வழக்குகள், உத்தரவுகள் ஆகியவற்றில் குறிப்பிட்ட சட்டமே பொதுவான சட்டங்களை விட முன்னுரிமை பெரும் என்று பதிந்ததைக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் கவலையான மத சட்டங்களைக் கொண்டு அமெரிக்க நிறுவனங்களை இழப்பீடு கொடுக்க வைக்க இயலும் என்பதற்கு பதில் சொல்லும் வகையில் இது சேர்க்கப்பட்டுள்ளது.

மூன்றாவது உறுதிமொழியும் இதே போல் நீதிமன்ற உத்தரவுகள், வழக்குகளைக் கொண்டு முன்தேதியிட்டு இந்தச் சட்டங்களைச் செயல்படுத்த முடியாது என்று உறுதி தருகிறது. கடந்த காலத்தில் நடந்த விபத்துக்களுக்கு வழக்குப் போட முடியும் என்கிற அமெரிக்காவின் கவலையைத் தீர்க்கவே இந்தப் பிரிவு.

இந்தச் சட்டங்கள் கூடுதல் இழப்பீட்டுக்காக சர்வதேச அணு சக்தி அமைப்பின் சட்டப்பிரிவு 12வுடன் ஒத்துப்போகிற வகையில் அமைந்திருக்கிறது என்பதை உறுதி செய்கிறது. காரணம் இந்தப் பிரிவு உள்நாட்டுச் சட்டங்களுக்கு இடம் தரும் வகையில் அமைந்திருப்பதால் முகப்புரையில் இதனோடு ஒத்துப்போகிற வகையில் இந்திய சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

அரசு வட்டாரங்கள், இந்த உறுதிமொழிகள் எந்த சட்டரீதியான பாதுகாப்பு இல்லை என்றாலும் இவற்றைச் சட்டத்தை நீதிமன்றம் பொருள் கொள்ள முனையும்போது நிறுவனத்தின் வாதத்தை வல்லுப்படுத்த சமர்ப்பிக்க இயலும் என்கிறது. இதைத் தொடார்ந்தே அமெரிக்க நிர்வாகம் தன்னுடைய சம்மதத்தை தந்தது. அதற்கு பதிலாக தான் தரும் அணு உலை இயக்கத்துக்கான பொருட்களைத் தொடர்ந்து கண்காணிக்க மாட்டோம் என்றும், சர்வதேச அணு சக்தி அமைப்பிடம் இருந்து அத்தகவல்களைப் பெற்றுக் கொள்வோம் என்றும் உறுதி தந்தது. முள் போல உறுத்திக் கொண்டிருந்த சிக்கல் தீர்க்கப்பட்டு அமெரிக்க அரசு ஒப்புக் கொண்டாலும் இதை அமெரிக்க நிறுவனங்கள் ஏற்க வேண்டும். இது கடக்க வேண்டிய பாலமாக உள்ளது.

இந்த முடிவு எட்டப்பட்டதால் அமெரிக்கா இந்தியாவை நான்கு அணு சக்தி தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்புகளான அணுசக்தி தொழில்நுட்ப விநியோகக் குழு (என்எஸ்ஜி), ஏவுகணை தொழில் நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பு (எம்டிசிஆர்), வாசெனர் உடன்படிக்கை, ஆஷ்திரேலிய குழு ஆகியவற்றில் இணைக்கும். குறிப்பாக எம்டிசிஆரில் இணைய இந்தியா மார்ச்சிலேயே விண்ணப்பிக்க உள்ளது.

அணு ஒப்பந்தத்தையும் தாண்டி
மோடி கடந்த ஆண்டு அமெரிக்காவுக்குப் போனபோது அவரை நோக்கி ஓர் முக்கியமான கேள்வியை அமெரிக்கா எழுப்பியது. மோடி ஏன் தனது பகுதியான ஆசிய பசிபிக்கில் தெளிவான பாதுகாப்பு தொலைநோக்கையும் சர்வதேச பாதுகாப்பு சிக்கல்களில் தன் நிலைப்பாட்டையும் இன்னமும் உருவாக்கவில்லை என்கிற கேள்வியே அது.

ஜப்பானிய பிரதமர் ஷினோ அபே கொண்டு வந்த இந்தோபசிபிக் என்கிற வார்த்தையை மோடி பிடித்துக்கொண்டார். இந்தியாவை அபே ஆசிய பசிபிக் பகுதியின் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் உடனிணைக்க விரும்புகிறார். இந்தப் புள்ளியில் தான் இந்தியாவை ஆசிய பசிபிக் பொருளாதார் ஒத்துழைப்பில் (ஏபிஇசி) இணைக்கப் பேச்சுவார்த்தைகள் துவங்கின.

ஒபாமாக்குப் பாகிஸ்தான் தொடர்பாக கவலை மிகுந்த கேள்வி இருந்தது. மோடியின் நிலைப்பாட்டை அவர் டீ பார்ட்டியின் பொழுது அறிந்துகொள்ள விரும்பினார். ஒரு மாதத்துக்கு முன்னர் ஜான் கெர்ரி 'ஆற்றல் மிகு குஜராத்' சந்திப்பில் இதைச் சார்ந்தே பேசினார். இந்தக் கேள்விக் கணைகளால் பிரதமர் சற்றே கடுப்பாகி, பாகிஸ்தானை என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று பதில் சொன்னதாகத் தெரிகிறது. பெஷாவர் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு தான் ஆதரவுக் கரம் நீட்டப் போயும், மும்பை தாக்குதலுக்கான 'மாஸ்டர் மைண்ட்' ஜாகீர் உர்லக்விக்குப் பெயில் வழங்கி பாகிஸ்தான் அதைக் கெடுத்துக்கொண்டது என்பதையும் விளக்கியுள்ளார்.

இரு பக்கமும் முக்கியமான முரண்பாடுகளைத் திறந்த, இயல்பான உரையாடல்கள் மூலம் தீர்க்கும் முனைப்புக் காட்டப்பட்டது.

ஒரு அமெரிக்க ஜனாதிபதியை குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்த மோடியின் பெருந்தன்மையைப் புகழ்ந்த ஒபாமா, ஒரு அரசியல்வாதியாகத் தானும் இந்த அழைப்பின் அருமையை உணர்ந்திருப்பதாகச் சொன்னார். எல்லா மதங்களுக்குமான சுதந்திரம் பற்றி ஒபாமா இறுதியில் குறிப்பிட்டு விட்டுப் பறந்தாலும் அதைப் பற்றிக் குறை சொல்லாமல் போக வேண்டிய தூரத்தை பற்றியே இந்திய அரசு கவனம் கொண்டிருக்கிறது.

நன்றி : இந்தியா டுடே

Tags:

Leave a Reply