பிரதமர் நரேந்திரமோடியின், இம்மாத ரேடியோ உரையில், மாணவர்களின் தேர்வு குறித்த விஷயங்கள் இடம்பெறும் என, தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், 'மான் கீபாத்' என்ற தலைப்பில், நாட்டுமக்களுக்காக ரேடியோ மூலமாக உரை நிகழ்த்திவருகிறார். கடந்த மாதம், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சேர்ந்து, பிரதமர் மோடி, ரேடியோவில் பேசினார். இந் நிலையில், பள்ளி தேர்வுகள் நெருங்குவதை அடுத்து, இம்மாத உரையில், அதுதொடர்பான விஷயங்களுக்கு மோடி, முக்கியத்துவம் அளிக்க போவதாக, சமூக வலை தளத்தில் அவரே தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியுள்ளதாவது: நாடுமுழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள், விரைவில் பொதுத்தேர்வு எழுத போகின்றனர். எனவே, என்னுடைய ரேடியோ உரை, அவர்களுக்கு உதவும்வகையில் இருக்க வேணடும் என, விரும்புகிறேன். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தேர்வு அனுபவம் குறித்தும், மாணவர்கள், இதற்குமுந்தையை தங்களின் தேர்வு அனுபவங்கள் குறித்தும், என்னுடன் பகிர்ந்துகொள்ளலாம். இவ்வாறு, மோடி கூறியுள்ளார்.

Leave a Reply