இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் பூக்கும் செடி வெள் அலரி என்றும், மஞ்சள் அலரி, செவ்வலரி என்றும் கூறுவார்கள்.
இதன் வேர், பட்டை, பால், எல்லாம் உபயோகப்படும். இது கார்ப்பும், கைப்பும் கொண்ட சுவையுடையது. இது, வாந்தியை உண்டாக்கும். நீர் மலம் போக்கும் தன்மையுடையது. குடற் புழுக்களைக் கொள்ளும் தன்மையை உடையது. இதன் பூ, சுரம், அரோசாம், குட்டம், விதாகம், புடை, கிரந்தி, இரத்தக்கட்டி பித்தநோய், தலை எரிவு இவற்றைப் போக்கும்.
இதன் வேர், பட்டை, கொட்டை இவை மிகவும் விஷமுடையவை. அதீத குணமுடையதால் உயிரைப் போக்கவல்லது. இதன் விதையை அரைத்து நல்லெண்ணெயில் கலக்கிச் சாப்பிட தோடங்கள் விகற்பமடைந்து உயிரைப்போகும். எந்த சிகிச்சையும் பயனளிக்காது. இதன் விதையை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றைச் சுத்தம் செய்து காப்பாற்ற முடியும்.
இதன் பூ, சுரம், அரோசாம், குட்டம், விதாகம், புடை, கிரந்தி, இரத்தக்கட்டி பித்தநோய், தலை எரிவு இவற்றைப் போக்கும்.