நிறைவேற்ற முடியாதளவிற்கு தவறான வாக்குறுதிகளை அளித்து கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

டெல்லி சட்ட சபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மிக்கு 67 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 3 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது :- டெல்லியில் பா.ஜ.க முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி அறிவிக்கப்பட்டதும் கட்சியில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் பதவியில் இருந்த போது நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரியாக செயல்பட்டார்.

கெஜ்ரிவால் மக்களிடம் தவறான வாக்குறுதிளை அளித்து வெற்றிபெற்றுள்ளார். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மத்திய அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துவருகிறது. 8 மாதங்களில் பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் மோடி. மோடிக்கு இன்னும் நல்லஇமேஜ் உள்ளது. ''ஜன்தன் யோஜனா'' திட்டத்தில் நாடுமுழுவதும் 11 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. எம்.பி.க்கள் வரம்புமீறி செயல்படக் கூடாது என்று மோடி பலமுறை அறிவுறுத்தி உள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply