டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள நிலையில் அந்தகட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்ட பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி உறுதியாகி விட்டுள்ள நிலையில், அர்விந்த் கேஜ்ரிவாலை தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும் போது, "நான் அர்விந்த் கேஜ்ரிவாலை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தேன். டெல்லியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எப்போது உறுதுணையாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி யிடம் வாழ்த்துபெற்ற கேஜ்ரிவால், "டெல்லியின் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க விரைவில் நான் உங்களைவந்து சந்திக்கின்றேன். மத்திய அரசின் உறுதுணை அவசியமானது" என்று பதிலளித்துள்ளார்.

Leave a Reply