பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் விருகம்பாக்கத்தில் உள்ள லோகையா காலனியில் வசித்துவருகிறார். நேற்று மதியம் 2 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் தமிழிசை சவுந்தரராஜன் வீட்டின் முன்பு பட்டாசுகளை கொளுத்திவிட்டு சென்று விட்டனர். பட்டாசு வெடிக்கும் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். ஆனால் அங்குயாரும் இல்லை. இது குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்குகிடந்த 129-வது வார்டு அதிமுக. கவுன்சிலர் செந்தில் பாண்டியின் விசிட்டிங்கார்டில் உள்ள செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டனர். அவர் ஸ்ரீரங்கத்தில் இருப்பதாகவும், இதில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.

Leave a Reply