இது இந்தியர் சுயமரியாதைக்கு இதம்
நம் ஒவ்வொருவருக்கும் தொட்டில் முதல் சுடுகாடு வரை டிஜிட்டல் அடையாளம் – வாழ்நாள் முழுமைக்கும், பிரத்யேக எண், மிகவும் பாதுகாப்பானது, நம்பகத்தன்மை உடையது – கிடைக்கப் போகிறது. எல்லாவிதமான சேவைகளையும் இந்த தேசிய கிராமப்புற இணையப் பணி மூலம் கிடைக்க வழிவகை செய்யப்படும். 2016 டிசம்பருக்குள் 2,50,000 கிராம பஞ்சாயத்துக்கள் பிராட்பேண்ட் ஹைவேக்களாக மாற்றப்பட்டு விடும். 2017-ல் 2.5 லட்சம் கிராமங்கள் இணையதள சேவையை அடைந்திருக்கும் ஆன்லைன் மூலமாக மருத்துவ ஆலோசனை, மருந்துகள் சப்ளை, நோயாளிகளைப் பற்றின தகவல் மூலங்கள் சேகரிப்பு, விவசாயிகளுக்கு கடனுதவி, நிவாரணத் தொகை எல்லாம் மொபைல் பேங்க்கிங் மூலம் வழங்குதல், எல்லா பள்ளிகளிலும் இலவச வை-பை, அரசாங்கத்தின் எல்லா துறைகளின் ஆவணங்களும் செயல்பாடுகளும் ஆன்லைனில்! வியப்பாக இருக்கிறதல்லவா?

இதனால், நீங்கள் விலாசம் மாறினாலும், பொது விநியோக முறையில் கிடைக்கும் பொருட்களை நீங்கள் தொடர்ந்து தடையின்றிப் பெற முடியும். முதியோர் பென்ஷன் சம்பந்தமாக ஒவ்வொரு வருடமும் நவம்பரில் தாங்களே நேரில் வந்து கருவூலத்தில் தாங்கள் உயிருடன் இருப்பதை நிரூபிக்க தேவையில்லை. அரசு அதிகாரிகள் மிகச் சரியான நேரத்திற்குத் தங்கள் இருக்கைகளில் இருப்பதை ஊர்ஜிதப்படுத்த முடியும். உணவு பாதுகாப்பு எல்லோருக்கும் உறுதி செய்யப்படும். புலம் பெயரும் உழைப்பாளர்களுக்கு வங்கிக் கணக்கு பேருதவியாக இருக்குமே? அதுவும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் தான் சாத்தியம்.

மேலும் பிறப்பு – இறப்பு, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பாஸ்போர்ட் விண்ணப்பம், சொத்து வாங்குவது/விற்பது என எதற்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை. கிராமப்புறங்களில் வசிப்போர் அடையாள சான்று கேட்டு வி.ஏ.ஓக்களிடம் கையெழுத்து கேட்டு மண்டியிடத் தேவையில்லை. இந்தியர்கள் தாங்களே தங்களை அட்டெஷ்ட் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்படுகிறது. ஆக, கையெழுத்திற்காக கெஜட்டை ஆபீஷர்களிடம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

ஒரு லட்சம் கோடி ரூபாய் திட்டம் இது. அரசாங்கத்தின் அத்தனை டிபார்ட்மெண்டுகளும் சேர்ந்து இத்திட்டத்தில் பங்கு கொள்கின்றன. இதனால் உந்தப்பட்டு பல ஆயிரம் தொழில் முனைவோரும், பெரிய நிறுவனங்களும் முதலீடு செய்து தொழில் சிறக்கச் செய்வார்கள். பெரிய அளவில் ஐடி துறையில் வளர்ச்சி காண்போம்! நமது கணினி இளைஞர்களுக்கும் நல்ல எதிர்காலம்!

நன்றி : விஜய பாரதம்
-பூமாகுமாரி

Tags:

Leave a Reply