எனது பெயரில் கோயில் கட்டா தீர்கள். அதற்குபதிலாக அந்த பணத்தையும், நேரத்தையும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக செலவிடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மோடிக்கு கோயில் கட்டுப் பட்டு அதில் மோடியின் சிலை நிறுவப்பட்டுள்ளது தொடர்பான செய்திகள் சில ஊடகங்களில் வெளியாகின.

இந்தசெய்தியை சுட்டிக் காட்டி, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியதாவது: குஜராத் மாநிலம் ராஜ் கோட்டில் எனக்கு கோயில் கட்டப் பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உ ள்ளன. அந்த செய்தியை பார்த்தேன். அது என்னை அதிர்ச்சிக் குள்ளாகியுள்ளது. மேலும், எனக்கு கோயில் கட்டப் பட்டுள்ள செயலால் நான் மிகுந்தவேதனை அடைந்தேன். எனது பெயரில் கோயில்கட்டாதீர்கள் என தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். எனக்கு கோயில்கட்டுவது இந்திய பாரம்பரியத்துக்கு எதிரானது. அதற்குப்பதிலாக அந்த பணத்தையும், நேரத்தையும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக செயல் படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மோடி கோயில்' திறப்புவிழா ரத்து செய்யப்படுவதாக அக்கோயில் கட்டுமானப் பணிகளுக்கு உதவிய ஓம் யுவா இயக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் உந்தாத் தெரிவித்துள்ளார். .

இதுதொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழுக்கு ரமேஷ் உந்தாத் அளித்துள்ள பேட்டியில், "கோயில் திறப்புவிழா இன்றைக்கு நடைபெறாது. பிரதமர் தனது ட்விட்டரில் சிலகருத்துகளை தெரிவித்துள்ளார். அவருக்கு கோயில் எழுப்புவது நமது கலாச் சாரத்து எதிரானது என குறிப்பிட்டுள்ளார். இதனை நாங்களும் ஆமோதிக்கிறோம். எனவே கோயில் திறப்புவிழாவை ரத்து செய்கிறோம். மோடியின் சிலை அங்கிருந்து அகற்றப்படும். இனி மெல் இக்கோயிலில் பாரதமாதாவுக்கு மட்டுமே சிலை இருக்கும். மோடி, எங்கள் இதயங்களில் இருப்பார்" என தெரிவித்தார்.

Leave a Reply