அண்டை நாடான பாகிஸ் தானில் தீவிரவாத நடவடிக்கைகள் பரவிவருவதும், இந்தியாவில் உள்ள அமைப்புகளுடன் அவர்கள் கொண்டுள்ள தொடர்பும் பாதுகாப்புக்கு சவாலாக உள்ளன என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

தில்லியில் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி தலைமையில் அனைத்து மாநில ஆளுநர்கள் மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் 21 மாநில ஆளுநர்கள் , 2 துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தங்களது செயல் பாட்டை விரிவு படுத்தி வருகின்றனர். இந்தியாவில் உள்ள அமைப்புகளோடும் அவர்கள் தொடர்பு வைத்துள்ளனர். இதனால், எல்லையில் அமைந்துள்ள மாநிலங்களின் பாதுகாப்புக்கு பெரும்சவால் எழுந்துள்ளது. எல்லையில் அத்து மீறி தாக்குதல் நடைபெறுவது நீடிக்கிறது. தீவிரவாத ஊடுருவல்களை தடுக்க பன்முக நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள், அதனை எதிர் கொள்வதில் கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Leave a Reply