ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள காத்திருக்கும் இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி ட்விட்டரில் தனித் தனியாக வாழ்த்து தெரிவித்து அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

"அமைதியான கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு என் மன மார்ந்த வாழ்த்துக்கள். அதிரடியாக விளையாடுங்கள், அணியை நன்கு வழிநடத்துங்கள், இந்தியாவைப் பெருமைப்படுத்துங்கள், நீங்கள் நிச்சயம் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

கோலி, உங்கள்மீது ஒட்டுமொத்த இந்தியாவும் நம்பிக்கை வைத்திருக்கிறது.

தவான், நீங்கள் அதிகமான ரன்களை எடுங்கள், உங்களை உற்சாகப் படுத்த இங்கு நாங்கள் இருக்கிறோம்.

ரகானே, இந்த மிகப் பெரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

அஸ்வின் உங்கள் சுழற்பந்து வீச்சு மட்டை யாளர்களை பீதியை உண்டாக்கி நமக்கு வெற்றியை தேடித்தர வேண்டும், நன்றாக விளையாடுங்கள்.

களத்தில் எப்போதும் சுறு சுறுப்பாக இருக்கும் சுரேஷ்ரெய்னா பவுன்சர் உட்பட அனைத்து விதமான பந்து வீச்சையும் எதிர்கொண்டு உங்கள் அதிரடியான மட்டை வீச்சால் பந்துகளை மைதானத்திற்கு வெளியில் போகுமாறு விளாசுங்கள்" என்று மோடி ஆலோசனைகளை கூறியுள்ளார்.

மேலும் மோகித் ஷர்மா, முகமது சமி, உமேஷ், ஜடேஜா, ஸ்டுவர்ட் பின்னி, புவனேஸ்வர் ஆகிய வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

Leave a Reply