பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன் பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசி மூலம் பேசியதை மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி), தேசிய மாநாட்டு கட்சியும் (என்சி) வரவேற்றுள்ளன.

இது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் முஃப்தி முகம்மதுசையது வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நவாஸ் ஷெரீஃபுடன் பிரதமர் மோதி பேசியதையும், வெளியுறவு செயலர்கள் நிலையிலான பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்கியுள்ளதையும் வரவேற்கிறோம் .

இரு நாடுகளிடையே இணக்கம், பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்து வதற்கான புதியதிட்டத்தை இந்த மிகப்பெரிய நடவடிக்கை ஏற்படுத்தித் தந்துள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவாஸ் ஷெரீஃபுடன் மோடி பேசியதை தேசிய மாநாட்டுக் கட்சியும் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அலிமுகம்மது சாகர் கூறுகையில், "அண்டை நாடுகள் தங்களுக்கு இடையே நிலவும் பிரச்னைக்கு முடிவுகாண பேச்சு வார்த்தை நடத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்; என்றார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை தொலை பேசியில் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது இந்திய வெளியுறவு செயலர் ஜெய் சங்கர், பாகிஸ்தானுக்கு விரைவில் செல்வார் என அவர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply