தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் சொந்த ஊரில் நேற்று நடந்த விழாக்களில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சரத் பவாருக்கு புகழாரம் சூட்டினார். சரத்பவாரின் சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் பராமதியில், அவரது குடும்பத்தினர் நடத்தும் வித்யா பிரதிஷ்டான் கல்விநிலைய வளாகத்தில் சரத் பவாரின் மூத்த சகோதரரான மறைந்த அப்பா சாகேப் பவார் பெயரில் கட்டப்பட்டிருக்கும் ஆடிட்டோரியம் திறப்புவிழா நேற்று நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ஆடிட்டோரியத்தை திறந்துவைத்தார். இதைத்தொடர்ந்து இங்குள்ள வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகள் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்தவிழாவிலும் பிரதமர் நரேந்திர மோடி, சரத்பவார் ஆகியோர் கூட்டாக கலந்துகொண்டனர். இந்த பேரணியில் பேசுகையில், சரத் பவாரை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது; நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, மத்திய அரசில் இருந்தவர்களிடம் இருந்து வந்தபிரச்னைகள் உட்பட பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த சமயங்களில் நான் சரத்பவாரை தொடர்புகொண்டு ஆலோசனை கேட்டிருக்கிறேன். அவரும் அரசியல் பாகுபாடு இன்றி எனக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி பிரச்னைகளில் இருந்து விடுபட எனக்கு உதவி யிருக்கிறார். சரத்பவார் போன்ற தலைவர்களின் அனுபவங்களில் இருந்து நாம் பலநல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். இன்று ஊடகங்களுக்கு ஒரு விசேஷ நாளாக இருக்கும்.

தேர்தல் பிரசாரத்தின் போது நான் பேசியதையும் இப்போது நான் பேசுவதையும் நிச்சயம் அவர்கள் ஒப்பிட்டு செய்தி வெளியிடுவார்கள். இது தான் நமது நாட்டு ஜனநாயகத்தின் அழகியல். விவாதம், தொடர்பு ஆகிய இருத் தடங்களில்தான் ஜனநாயகம் பயணிக்கிறது. இரண்டு தலைவர்கள் சந்திப்பது ஒரு மிகப் பெரிய செய்தியாகிவிடுகிறது. தலை வர்களிடையேயான தொடர்புகள் எப்போதும் நின்று விடுவதில்லை. இந்த விஷயத்தில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு பொறுப்பு அதிகம் உண்டு. நாங்கள் இருவரும் வெவ்வேறு கட்சியிலிருக்கலாம், எங்களது அரசியல் எண்ணங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், நாட்டின் நலன் என்பது தான் எங்களது பொதுவான குறிக்கோள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சரத் பவார் பேசுகையில், நாங்கள் இருவரும் இந்த ஒரே மேடையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு அரசியல் வர்ணம் பூசவேண்டாம். வளர் ச்சியின் அடிப்படையில் தான் எங்களது செயல்பாடு அமைந்திருக்கும். அரசியலில் நாங்கள் இரண்டு நாட்கள் மோதிக் கொள்வோம். எஞ்சிய 363 நாட்களும் நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் பணியாற்றுகிறோம். நாட்டின்வளர்ச்சி சம்பந்தப்பட்ட எந்த நடவடிக்கை எடுத்தாலும் மத்திய அரசுக்கு நாங்கள் துணையாக இருப்போம் என்றார்.

Leave a Reply