இலங்கை அதிபரின் இந்தியவருகை அந்நாட்டு தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரதீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர்பிரச்சனை மற்றும் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுவரும் நிலையில், இலங்கை அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்ல தல்ல.

இலங்கை தமிழர் விவகாரத்தில் நிரந்தரதீர்வு ஏற்படுத்துவதில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசும், தமிழக பாஜகவும் உறுதியாக உள்ளது. இலங்கை தமிழர் பிரச்சனை நிரந்தர தீர்வுக்குவரும் என்ற மிகப் பெரிய நம்பிக்கையை இலங்கை அதிபரின் வருகை ற்படுத்தியிருக்கிறது.

அவர்வந்து இங்கே உள்ள பிரதம அமைச்சரையும், வெளியுறவுத் துறை அமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்துவிட்டு, பல தீர்வுகளை கொடுக்க இருக்கிறார் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரிகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம்கிடைக்கும் வகையில் விரைவில் மாற்றம் ஏற்படும். இவ்வாறு கூறினார்.

Leave a Reply