முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான ஆம் ஆத்மி அரசுக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்,'' என, டில்லி போலீசுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.

டில்லி போலீசின், 68வது உதய தின அணி வகுப்பு, டில்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

டில்லியில் நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில், புதியகட்சி ஒன்று, மக்களின் ஆதரவைப் பெற்று, அரசு அமைத்துள்ளது; அந்த அரசுக்கு, டில்லி போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்; அப்போதுதான், டில்லி நகரம் மேம்பாடு அடையும். 'கட்சிபாரபட்சம் பார்க்காமல், அனைத்து மாநிலங்களுக்கும், முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். அப்போதுதான், ஒருங்கிணைந்த கூட்டாட்சி அமைப்பு மூலம், உலகில் சக்திவாய்ந்த நாடாக, இந்தியா உருவாகும்' என, பிரதமர் நரேந்திர மோடி கூறிவருகிறார். அதனால், டில்லி அரசுக்கு, போலீசார் முழு ஒத்துழைப்பு தர வேண்டியது அவசியம்.

டில்லியில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யவும், சட்டம் – ஒழுங்கை பேணிக் காக்கவும், வளர்ச்சிப் பணிகள் சமூக விரோத சக்திகளால் தடைபடாமல் தடுக்கவும், போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். டில்லியில் சமீபத்தில், தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல், டில்லி போலீஸ் கமிஷனரும் மற்ற அதிகாரிகளும் பார்த்துக்கொள்ள வேண்டும். டில்லியில் பல தரப்பட்ட சமூகத்தினர் வசிக்கின்றனர். அதனால், சிறியவிஷயங்கள் கூட, தேசிய அளவிலான செய்திகளாகவும், பெரியசம்பவங்கள், சர்வதேச செய்திகளாகவும் மாறிவிடும். எனவே, டில்லி போலீசார் தங்களின் கவுரவத்திற்கு பங்கம்வராத வகையில், நடந்துகொள்ள வேண்டும். என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Reply