இந்தியா மதசார்பற்ற நாடாகவே இருக்கும். மதம் தனி நபர் சுதந்திரம் சார்ந்தது. வெறுப்பை பரப்ப இங்கு யாருக்கும் இடமில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி விக்யான் பவனில் நடந்த கிறிஸ்தவ நிகழ்ச்சி பிரதமர் மோடி மேலும் பேசியதாவது; இந்தியா மதசார்பற்ற நாடாகவே இருக்கும். மதம் தனி நபர் சுதந்திரம் சார்ந்தது. வெறுப்பை பரப்ப இங்கு யாருக்கும் அனுமதியில்லை" மத சகிப்புத்தன்மை என்பது ஒவ்வொரு இந்தியரின் மர பணுவிலேயே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மதத்தினரும் மற்ற மதத்துக்கு உரியமதிப்பை அளிக்க வேண்டும். மதரீதியான அத்துமீறல்கள் கூடாது. ஒவ்வொரு இந்தியரும் தனது மத நம்பிக்கையை பின் பற்றுவதில் முழுசுதந்திரம் இருப்பதை எனது அரசு உறுதிசெய்யும்.

பெரும்பான்மை மதத்தினர், சிறுபான்மை மதத்தினர் மீது வெறுப்பு பிரச்சாரத்தை வெளிப்படையாகவோ அல்லது மறை முகமாகவோ கட்டவிழ்த்து விட அனுமதிக்கப்பட மாட்டாது. மத ரீதியிலான பிரிவினைகள் உலகமெங்கும் அதிகரித்துவருகிறது. இது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. ஒவ்வொரு மதத்திலும் உண்மை இருக்கிறது. இந்தியத்தாய் நிறைய பக்தி மார்க்கங்களையும், மத குரு மார்களையும் பிரசவித்துள்ளாள். அனைத்து பக்தி மார்க்கங்களையும் வரவேற்று மரியாதை செலுத்தவேண்டும்.

இன்று, பாதிரியார் குரிய கோஸ், அன்னை யூப்ரேசியா ஆகியோர் புனிதர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர். இத்தருணத்தில் கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாது இந்தியர்கள் அனைவருமே பெருமைகொள்ள வேண்டும். இந்தியா பெருமைகொள்கிறது"

Leave a Reply