மத்திய நெடுஞ்சாலை போக்கு வரத்து மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்காரை இன்று சந்தித்துப்பேசினார்.

அப்போது, ஊட்டியில் உள்ள ஹிந்துஸ் தான் போட்டோபிலிம் தொழிற்சாலையின் தற்போதைய நிலைகுறித்து பேசினார்.

இந்நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக லாபம் ஏதும் ஈட்டஇயலாத நிலையில் இருப்பதால் அங்குள்ள கட்டமைப்பு மற்றும் இதரவசதிகளை பாதுகாப்புதுறை அமைச்சகம் தனது கீழுள்ள நிறுவனங்களின் மூலம் உபயோகப்படுத்த உள்ள சாத்திய கூறுகளை ஆராய வழி வகை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக மனோகர்பரிக்கார் உறுதி அளித்தார்.

Leave a Reply