பீகார் முதல்வர் ஜித்தன் ராம்மஞ்சிக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த 7 அமைச்சர்களையும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியைவிட்டு நீக்கியுள்ளது. சட்ட சபையில் பெரும்பான்மை பலத்தை மஞ்சி நிரூபிக்கவுள்ள நிலையில் இந்த நடவடிக்கையை ஐக்கிய ஜனதா தளம் தலைமை எடுத்துள்ளது.

முன்னதாக இந்த 7 பேரையும் கட்சியைவிட்டு ராஜினாமா செய்யுமாறும், அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறும் கட்சித்தலைவர் சரத்யாதவ் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அதை நிராகரித்து விட்டனர். இதையடுத்து அனை வரையும் சஸ்பெண்ட் செய்துள்ளார் சரத்யாதவ்.

தற்போது மஞ்சி அமைச் சரவையில் ஒரே ஒரு அமைச்சர்மட்டுமே பாக்கி உள்ளார். அவர் கட்சிசாராதவர், சுயேச்சை எம்எல்ஏ ஆவார். மஞ்சி அமைச்சரவை யிலிருந்து 20 பேர் ராஜினாமா செய்துவிட்டனர். 2 பேரை அவர் நீக்கியிருந்தார். 7 பேர் மட்டுமே மஞ்சிக்கு ஆதரவாக நீடித்துவந்தனர்.

இந்த நீக்கத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த 7 பேரும் கலந்துகொள்ள தடை இல்லை. இருப்பினும் இவர்களில் நான்குபேர் மேலவை உறுப்பினர்கள் என்பதால் இவர்களால் சட்ட சபையில் வாக்களிக்க முடியாது. பிப்ரவரி 20ம் தேதி மஞ்சி தனது பெரும் பான்மையை சட்ட சபையில் நிரூபிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply