மன நோய் சிகிச்சையை தடுக்கும் மூட நம்பிக்கைகளை அகற்றுங்கள் என்று பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் டாக்டர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவுரை வழங்கினார்.

பெங்களூரு தேசிய மன நிலை சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியல் (நிமான்ஸ்) மருத்துவ மனையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, மருத்துவ படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:–

மன நோயை குணமாக்குவதிலும், அதற்கு மருத்துவசிகிச்சை அளிப்பதிலும் மூட நம்பிக்கைகள் தடையாக உள்ளன. மன நல சுகாதாரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் போதிய விழிப் புணர்வு இல்லாதது, அறியாமை, மூடநம்பிக்கை ஆகிய 3 பெரியசவால்கள் உள்ளன. இந்த தடைகளை அகற்ற டாக்டர்கள் பாடுபடவேண்டும். மன நோயை குணமாக்க முடியும் என்பதை மக்கள் நம்பவேண்டும். இந்த நோயை குணமாக்க முடியும் என்பது அறிவியல் பூர்வமானது.

இந்தவிழாவில் ஏழை பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சி தருகிறது . அவர்கள் இந்தவிழாவின் சிறப்பு விருந்தினர்கள். நான் பங்கேற்கும் இதுபோன்ற பட்ட மளிப்பு விழாக்களில் இத்தகைய மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும். இதில் கலந்துகொள்வதின் மூலம் நாமும் உயரவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தும்.

இங்கு பட்டம் பெற்றுள்ள டாக்டர்கள் இந்த குழந்தைகளுடன் கலந்துரை யாடல் நடத்துங்கள். இது அவர்களை ஊக்கப் படுத்துவதாக அமையும். டாக்டர்கள் ஏழைமக்களுக்கு சேவை செய்யவேண்டும். இந்த சேவை மகிழ்ச்சியை தரும். திறன் மற்றும் கல்வியுடன் டாக்டர்களிடம் நல்ல அனுபவத்தை பெறவேண்டும்.என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply