பாகிஸ்தான் படகு தீப்பிடித்து எரிந்தசம்பவம் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று ராணுவ மந்திரி பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

வட மேற்கு கடலோர காவல்படை தலைமை அதிகாரி பி.கே.லோசாலி பத்திரிகைக்கு அளித்தபேட்டி ஒன்றில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ந் தேதி இரவு குஜராத் கடலோர பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் படகை தகர்த்ததாக கூறியதாக தகவல் வெளியாகியது. அவர் அப்படி கூறுவில்லை என்று மறுப்பும் தெரிவித்துள்ளர்.

இந்த நிலையில் பெங்களூரு வந்த ராணுவமந்திரி பாரிக்கரிடம் பாகிஸ்தான் படகு எரிந்தவிவகாரம் தொடர்பாக நிருபர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:–

பாகிஸ்தான் படகு எரிந்த சம்பவத்தில் மத்திய அரசு கொண்டுள்ள நிலைப் பாடுதான் சரியானது. இது தொடர்பாக ராணுவ அமைச்சகம் தெளிவான அறிக்கை தந்துள்ளது. அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் .

அதற்கான சான்றை என்னால் வெளிப் படையாகவும் காட்டமுடியும். இந்திய கடல்பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர்கள் தான் தாங்களாகவே படகை குண்டுவைத்து தகர்த்துக் கொண்டனர். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது என்றார்

Leave a Reply