சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ் பேரனின் திருமண விழா வில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவின் பேரன் தேஜ்பிரதாப்சிங். இவர், உ.பி., மாநிலம் எடாவா தொகுதியின் எம்.பி.,யாகவுள்ளார். இவருக்கும், பீகார் முன்னாள் முதல் வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவின் இளைய மகள் ராஜ்லட்சுமிக்கும், இம்மாத இறுதியில் திருமணம் நடக்கவுள்ளது.

திருமணத்துக்கு முன்னதாக, 'திலக்சடங்கு' எனப்படும், பொட்டு வைக்கும் நிகழ்ச்சி, நாளை நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடியும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல், அரசியல்வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முலாயம்சிங் யாதவும், லாலு பிரசாத் யாதவும், பாஜக.,வையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தலைவர்களின் வீட்டுநிகழ்ச்சியில் மோடி பங்கேற்கவுள்ளதை, வடமாநிலங்களில் பின்பற்றப்படும் அரசியல் நாகரிகத்துக்கு உதாரணமாக கூறப்படுகிறது .

Leave a Reply