பாதுகாப்பு துறையில், 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம்சார்ந்த கலந்தாய்வு கூட்டம், பெங்களூருவில் நடைபெற்றது. இந்தியதொழிலக கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில், மனோகர் பாரிக்கர் பேசியதாவது:பாதுகாப்பு துறையில், கொள்முதல்சார்ந்த தற்போதைய நடைமுறைகளில் சிக்கல் உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.இத்தகைய தடைகளையும் தாண்டி, ராணுவதளவாட கொள்முதல் பணிகள் மேற்கொள்வோரை பாராட்டுகிறேன்.

கவனத்திற்குரிய இப்பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்படும். பாதுகாப்பு துறையின் கொள்முதல் நடைமுறைகள், எளிமையாக்கப்படும். ஒவ்வொரு பணியை முடிப்பதற்கும், கால நிர்ணயம் செய்யவேண்டும். பாதுகாப்பு துறையின் கொள்முதல், 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் போன்றவற்றில் உள்ள பிரச்னைகளில், 80 – 90 சதவீதத்தை நான் புரிந்து கொண்டி ருக்கிறேன். அதற்கான தீர்வுகளை செயல்படுத்தும் நேரம் இது. வெட்டிப்பேச்சு பேச மாட்டேன்; ஆனால், செயலைசெய்து காட்டுவதே . என் சுபாவம் என்று அவர் கூறினார்.

Leave a Reply