நாட்டின் வளர்ச்சிக்கு முது கெலும்பாக ரெயில்வே துறை திகழ்கிறது , ஒவ்வொரு நகரையும் ரெயில்சேவை மூலம் இணைக்க அரசு விரும்புகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் ரெயில்நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், ஹசாரிபாக்- கோடர்மா ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டின் வளர்ச்சிக்கு ரெயில்வே துறை முதுகெலும்பாக விளங்குகிறது. எனவே, ரெயில்வே துறையை மேம்படுத்துவதுடன் நாட்டின் ஒவ்வொரு நகரையும் இருப்புப்பாதை மூலம் ரெயில் சேவை வழங்கவும் அரசு விரும்புகிறது.

கோடர்மா- ஹசாரிபாக்-ராஞ்சி ரெயில்திட்டம் உள்ளிட்ட 6 முக்கிய ரெயில்வே திட்டங்களுக்காக ஜார்க்கண்ட் அரசுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டங்கள் 2017 மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும். இந்ததிட்டங்களுக்கு மத்திய- மாநில அரசுகள் தலா 50 சதவீத நிதி வழங்கும்.

புதிய மற்றும் நவீன தொழில் நுட்பங்களுடன் ரெயில்வே துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது. ரெயில் பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்துதரப்படுகிறது. ரெயில்வேயை நவீனப் படுத்துவதன் மூலம், வேலை வாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறோம். ஹசாரிபாக்- கோடர்மா ரெயில்வே பாதைக்காக நிலம்வழங்கிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் பேசினார்.

Leave a Reply