நிலக்கரி சுரங்கங்களை ஏலம் எடுக்க, தனியார் நிறுவனங்கள் போட்டிபோடுவதை பார்க்கும்போதும், ஏலத்தில் ஏராளமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டியதை பார்க்கும் போதும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்தது உறுதியாகிறது,'' என, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

நிலக்கரி சுரங்க உரிமங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, பாஜக., புகார் கூறியபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அதைமறுத்தார். அதன்பின், சி.ஏ.ஜி., வெளியிட்ட அறிக்கையில் முறைகேடுகள் அம்பலமாகின. மொத்தம், 1.86 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தெரியவந்தது. நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்தில், தனியார் நிறுவனங்கள் காட்டும் ஆர்வம், எவ்வளவு தொகைக்கும் ஏலம் எடுக்கதுணியும் நிறுவனங்கள் போன்றவற்றை பார்க்கும்போது, முறைகேடு நடந்தது உண்மைதான் என்பது தெரியவருகிறது. ஆனால், முந்தைய நிதியமைச்சகம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், அரசுக்கு நஷ்டமேவரவில்லை என கூறியது. இவ்வாறு, வெங்கையா நாயுடு கூறினார்.

முதல் தொகுப்பு, சமீபத்தில் ஏலம்விடப்பட்டது. ஏலம் துவங்கிய நான்கு நாட்களிலேயே, 60 ஆயிரம்கோடி ரூபாய் அரசுக்கு கிடைத்தது. முதற்கட்டமாக, மொத்தம், 19 தொகுப்புகள் ஏலமிடப்பட உள்ளன. அவற்றில், 14 தொகுப்புகள் ஏலம்போயின. அதில், 80 ஆயிரம்கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இரண்டாவது ஏலம், இம்மாதம் 25 முதல், மார்ச் 5 வரை நடக்கிறது. அதில், 43 தொகுப்புகள் ஏலமிடப்பட உள்ளன.

Leave a Reply