ஊழல் கறைபடிந்த நபர்களுடன் உள்ள உறவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரட்டைவேடம் போடுகிறார் என்று மாநில பாஜக தலைவர் ராகுல் சின்ஹா குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

மம்தா பானர்ஜியைச் சுற்றி கறைபடிந்த நபர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் மாட்டி கொண்டு விட்டால், அவர்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறிவிடுகிறார். ஆனால், இதுபோன்ற சந்தேகத்துக்குரிய தொடர்புகள் குறித்து மம்தா விளக்கமளிக்க வேண்டும். சனிக் கிழமை கைது செய்யப்பட்ட சிவாஜி பாஞ்சா அதற்கு உதாரணம். அவர் மம்தாவின் வங்கதேச பயணத்தின் போது உடன் சென்றிருந்தார். முதல்வருடன் சுற்றுப் பயணத்தில் சென்ற நபர் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டதாக நான் கேள்விப்பட்டதில்லை. இதற்கு முன்பு மம்தா சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்ட போது, அவருடன் நிலக்கரி கடத்தல் காரர் ஒருவரும் உடன் சென்றிருந்தார் என்று ராகுல் சின்ஹா கூறினார்.

Leave a Reply