தேர்தல் அறிவிப்புக்கு முன்பே முதல்வர் பதவிக்கு நான், நீ என்று போட்டிபோடுவதும், வேட்பாளர் அறிவிப்பதும் கூட்டணி தர்மத்துக்கு எதிரானது என தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் பா.ஜ.க., பிரமுகர் இல்ல திருமண விழாவுக்கு மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எந்ததேர்தலாக இருந்தாலும் கூட்டணி கட்சிகள் இணைந்து பணியாற்றவேண்டும். ஊழலுக்கு எதிரான ஆட்சி பா.ஜ.க ஆட்சி. நடைபெற்ற சட்ட சபை கூட்டத்தில் தே.மு.தி.க.வினர் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தலுக்கு முன்னதாகவே முதல்வர் வேட்பாளர் என அறிவிப்பு வெளியிடுவது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது. அது கூட்டணியின் வெற்றியை பாதிக்கும். திராவிடகட்சிகளுக்கு மாற்று சக்தியை பாஜக கூட்டணி உருவாக்கும். சட்டமன்ற தேர்தல் வரும் போது நல்ல கூட்டணி அமைந்து 2016-ல் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி ஆட்சிஅமைக்கும்.

தற்போது தமிழகத்தில் பல லட்சம் உறுப்பினர்கள் விரும்பி சேர்ந்துள்ளனர். பிரதமர் மோடி இலங்கை தமிழர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறார். மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீன்பிடிக்க நிரந்தரதீர்வு காணப்படும்," என்றார்.

Leave a Reply