நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க வராமல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விடுப்பு எடுத்துள்ளதை பாஜக விமர்சித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற விவகா துறை இணை அமைச்சர் ராஜிவ்பிரதாப் ரூடி, ராகுலின் செயல் காங்கிரஸின் அக்கறையின்மையை காட்டுவதாக கூறியுள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்தொடரில் ராகுல் பங்கேற்காதது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித்பத்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

பல்வேறு மாநில தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்வி காரணமாகவே ராகுல்காந்தி பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால், ராகுல்காந்தி பாங்காக் சென்றுவிட்டதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply