ஒவ்வொருவரும் தியானம் செய்வதை தினசரி நடவடிக்கையாக கொண்டால், நாட்டில் நடக்கும் சட்டம் ஒழுங்கு சம்பவங்களை நிச்சயம் தடுக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இது குறித்து முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளதாவது, முகமது நபிகள் சிறந்த தியான யோகியாக திகழ்கிறார். இஸ்லாமியர்கள் தினசரி 5 முறை தியானம் செய்கின்றனர். தியானத்தின் மூலம் பலநன்மைகள் உள்ளது. தியானம் செய்வதை அனைவரும் தினசரி நடவடிக்கையாக செய்யவேண்டும்.

இதனால் பலாத்கார சம்பவங்கள் முற்றிலும் குறையும் என்று நான் கூறவில்லை. ஆனால் நிச்சயம் குறையும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாழ்க்கையில் புதியவழியை தியானம் ஏற்படுத்தும். நமது உடல் நிலையை உணரச்செய்யும். நமது கவனம் உரிய இடத்தில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply