சமீபத் தில் அமெரிக்க அதிபர் கலந்துகொண்ட இந்திய குடியரசு தின விழாவில் நம் பிரதமர் மோடிஜி அவர்கள் போட்டிருந்த கோட்டின் விலை நான்கு லட்சம், என்றும் சிலர் பல லட்சம் இருக்கும் என்றும் ஆள் ஆளாளுக்கு ஒரு விலையை சொன்னார்கள்.

அதில்கூட அரசியல் செய்தார்கள்.

அத்தனைபேர் சர்ச்சையையும் முற்றுப்புள்ளிவைக்கும் வண்ணம் அதை ஏலம்போட்டு நான்கரை கோடிரூபாய் புனித கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பெருமையுடன் அளித்துவிட்டார்.

இந்தியா இதுவரை இவரைப்போன்ற பிரதமரை கண்டதில்லை. தனக்கும், தன் குடும்பத்திற்கும், தன் உற்றார் உறவினருக்கும், தலைமுறை தலைமுறையாக சேர்த்தவர்களை மட்டுமே இந்திய பிரதமர்களாக மக்கள் இதுவரை கண்டுவந்தனர்.

ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்தபின் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் அவர்கள் ஜனாதிபதி மாளிகையை காலி செய்யும்போது பல லாரிகளில் பரிசுப்பொருட்களை வாறி சென்றதாக சொல்கின்றனர்.

அதேபோல் முன்னாள் பிரதமர் மன்மோகன் அவர்களும் பிரதமர் இல்லத்தை காலிசெய்யும்போது பல லாரிகளில் அள்ளிச்சென்றதாக சொல்கிறார்கள்.

முதல்முறையாக தேச பக்தர் மோடிஜிபோன்ற மனிதப்புனிதரை நாடு தற்போது கண்டு களிக்கிறது.

அவர் பன்நெடுங்காலம் வாழவேண்டும். அவரை பார்த்து பக்கத்து நாட்டு மக்கள் ," தங்களுக்கு இவரைப்போன்ற தலைவர் கிடைக்கவில்லையே என்று பொறாமைப்படவேண்டும் " .

பொதுவாழ்வில் நேர்மை, அரசியலில் தூய்மை , செயல்பாடுகளில் தனித்தன்மை உள்ள பிரதமர் மோடிஜி வாழ்க, அவரை போற்றுவோம்.

" கண்ணை மறைக்கின்ற காலம் வரும்போது தர்மம் வெளியேறலாம் …. தர்மம் அரசாளும் தருணம் வரும்போது தவறு வெளியேறலாம் …. நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் "

Leave a Reply