அன்னை தெரசா ஒரு மதப்பிரச் சாரகர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்து கசப்பான உண்மை என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

சிவசேனாவின் அதிகார பூர்வ ஏடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்க விவரம்: கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவுக்கு வந்ததற்கு காரணம் மதமாற்றமே. முஸ்லிம்கள் மத மாற்றத்தை கத்தி முனையில் மேற்கொண்டனர், கிறிஸ்தவர்கள் அதை பணபலத்தாலும், சேவை என்ற போர்வையிலும் மேற்கொண்டனர்.

இந்த விவகாரத்தில் உண்மையை பேசியதன்மூலம் மோகன் பகவத் தேசத்துக்கு நன்மை செய்திருக்கிறார். அன்னை தெரசாவின் சேவைகளை நாங்கள் மதிக்கிறோம். அன்னை தெரசாவைப்போல், இந்து மதத்தை சேர்ந்த நிறைய சமூக ஆர்வலர்களும் ஏழை, எளியமக்களுக்கு சேவை செய்திருக்கின்றனர்.

ஆனால், அவர்கள் மத மாற்றத்தில் ஈடுபடவில்லை. அன்னை தெரசாவோ சேவை என்ற போர்வையில் மத மாற்றத்தில் ஈடுபட்டார் என்பது கசப்பான உண்மை. இந்த உண்மையையே ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன்பகவத் எடுத்துக் கூறியுள்ளார். அவரது கருத்தால் மதம் மாறிய வர்களை தாய் மதத்துக்கு திரும்பச்செய்யும் கர் வாப்சி பிரச்சாரம் வலுப்பெறும். இதற்காக, மோகன் பாகவத்தை சிவசேனா வெகுவாக பாராட்டுகிறது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply