உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து டெல்லியில், தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்ட மாநில தலைவர்களுடன் பா.ஜ.க தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அனைத்து மாநிலங்களின் பா.ஜ.க தலைவர்கள், பொறுப்பாளர்கள், அமைப்பு பொதுச் செயலாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொண்டார்.

கூட்டம் முடிந்த பின் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பாஜக. மிகவும் வேகமாகவும், தீவிரமாகவும் உறுப்பினர் சேர்க்கையை நடத்திவருகிறது. இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை சேர்த்த முதல்பத்து மாநிலங்களுக்குள் தமிழகம் வரும் வாய்ப்பு வெகுவிரைவில் எங்களுக்கு கிடைக்கும். தொடர்ந்து எங்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள், அவற்றை திறம்பட முடித்தவிதம் ஆகியவை பாராட்டும் படியாகவே இருந்தது என்பதை எங்கள் தேசிய தலைவர் உணர்ந்து கொண்டது எங்களுக்கு மிக்கமகிழ்ச்சி அளித்தது.

நாங்கள் மேலும் கடுமையாக பணியாற்றி எங்கள் இலக்கை எட்டுவோம். எங்கள் தேசிய தலைவர் அமித்ஷா வருகிற மார்ச் 5-ந் தேதி தமிழகத்துக்கு வரும்போது 600 மண்டல தலைவர்களை சந்திக்கிறார். தனிகவனம் எடுத்து உறுப்பினர்களை சேர்த்தவர்களுக்கு அவர் பாராட்டு பத்திரம் வழங்கப்போகிறார்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

3 responses to “கடுமையாக பணியாற்றி எங்கள் இலக்கை எட்டுவோம்”

Leave a Reply