இந்தியாவே முதன்மையானது எனும் தேசப் பற்றே எனது அரசின் மதமாகும். இந்திய அரசமைப்பு சட்டம் தான் எனது அரசின் ஒரே புனிதநூலாகும். தேசபக்தியே எனது அரசின் ஒரே பக்தியாகும். அனைவரது நலன் என்பதே எங்களது அரசின் பிரார்த்தனை ஆகும்.

இந்த நாட்டின் பிரதமர் என்ற முறையில், மதரீதியில் அபத்தமான கருத்துகளை தெரிவிப்பதை என்னால் அனுமதிக்க முடியாது. மத ரீதியில் பாகுபாடு காட்டுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை . சட்டத்தை யாரும் தங்களது கையில் எடுத்து கொள்ளவும் அதிகாரம் கிடையாது.

அரசியல் ரீதியிலான வகுப்பு வாதத்தால், நமது நாடு துண்டாடப்பட்டது; இதயங்கள் இரண்டு துண்டாகின. இந்நிலையில், எங்களிடம் ஏன் கேள்விகள் எழுப்பப்படுகின்றன எனத் தெரியவில்லை?

இந்த நாடே, வேற்றுமையால் நிரம்பியுள்ளது. இந்த வேற்றுமையில் நாம் ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும். ஒற்றுமை யின்மையை ஏற்படுத்த கூடாது. அனைத்து மதங்களும் வளர்ச்சியடைய வேண்டும். இந்தியாவின் தனித் தன்மையே இதுதான். இதற்கு, நமது அரசமைப்புச் சட்டம் தான் காரணம். அரசமைப்பு சட்டத்துக்கு உள்பட்டே, நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்ல நாங்கள் விரும்புகிறோம். தேசக் கொடியிலுள்ள மூவர்ணம் தான் எனது கண்களுக்குத் தெரிகின்றன. வேறு எந்த வண்ணமும் எனக்குத் தெரியவில்லை.

சிறிய விவகாரங்களுக்கு நான் அதிக முக்கியத்துவம் தருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. சிறிய விவகாரங்கள்தான், மிகப் பெரிய பிரச்னைகளுக்கு காரணமாகத் திகழ்கின்றன. ஆகையால் தான், சிறிய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறேன்.

நாட்டில் செய்தபணிகள் அனைத்தும், மத்தியில் எனது அரசு ஆட்சிக்கு வந்த 9 மாதங்களில்தான் செய்யப்பட்டது என தெரிவிக்க விரும்பவில்லை. முந்தைய அரசுகளுக்கும் அதன் பெருமையை பகிர்ந்து கொள்ளத்தயாராக இருக்கிறேன். இந்த நாடானது, 1947ஆம் ஆண்டு பிறந்தது என்பதில் நாங்கள் நம்பிக்கை வைக்க வில்லை. நமது நாடு பிறந்து, பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. சித்தாந்தங்கள் வரும், போகும். அரசுகளும் வரும்போகும். தத்துவங்களால் தான் நாடுகள் கட்டமைக்கப் படுகின்றன. அனைவருக்கும் நலன் என்பது தான், இந்தியாவின் அடிப்படை சித்தாந்தம் ஆகும்

பாரத பிரதமர் நரேந்திர மோடி

Leave a Reply