காஷ்மீர் முதல்–மந்திரியாக முப்தி முகமது சயீத் இன்று பதவி ஏற்றார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் சட்ட சபைக்கான பொதுத் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 23–ந் தேதி நடைபெற்றது. இதில் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களிலும், பாஜக 25 இடங்களும் வெற்றிபெற்றது. தேசிய மாநாட்டு கட்சி 15 தொகுதிகளையும், காங்கிரஸ் 12 தொகுதிகளையும் கைப்பற்றியது. எந்தகட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி அமைப்பதில் இழுபறி உருவானது . இதன் காரணமாக அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப் பட்டது.

மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜக.,வும் தொடர்ந்து நடத்திய கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிபெற்றதை தொடர்ந்து 49 நாள் கவர்னர் ஆட்சி முடிவுக்குவந்தது. ஜம்முவில் நடைபெறும் விழாவில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான 79 வயதாகும் முப்தி முகமது சயீத் முதல்மந்திரியாக பதவி ஏற்றார். துணை முதல்–மந்திரியாக பாஜக.,வை சேர்ந்த நிர்மல் சிங் பதவியேற்றுக் கொண்டார். புதிய முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட முப்தி முகமது சயீத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் மந்திரி சபையில் முதல் முறையாக பாஜக இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து மற்ற மந்திரிகள் பதவியேற்று வருகிறார்கள்.

பதவி ஏற்புவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய மந்திரிகள், மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply