பாராளுமன்றத்தில் மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் 'டிவிட்டர்' சமூக வலைத்தளத்தில், ''மத்தியபட்ஜெட் தெளிவான கண்ணோட்டத்தை கொண்டது. முற்போக்கானது, சாதகமானது, நடை முறையில் சாத்தியமானது, விவேகமானது. இந்தபட்ஜெட், ஏழைகளுக்கு ஆதரவானது. வளர்ச்சிக்கு சாதகமானது. இந்த பட்ஜெட்டின் மூலம் நாங்கள் மிகப் பெரிய பணிகளை செய்ய உள்ளோம்.

''ஏழைகளுக்கான, வளர்ச்சிகளுக்கான, வேலை வாய்ப்புக்கான, சாமானியமக்களின் கனவுகளுக்கான இந்த பட்ஜெட், கவருகிறவகையில் அமைந்து இருக்கிறது'' ''இந்த பட்ஜெட் முதலீட்டுக்கு உகந்தது, வரி பிரச்சினைகள் பற்றிய அனைத்து சந்தேகங்களையும் அகற்றுகிறது'' என கூறி, நிதி மந்திரி அருண் ஜெட்லியைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

Leave a Reply