சமையல், 'காஸ்' சிலிண்டர்களுக்கு நேரடிமானியம் வழங்கும் திட்டத்தால், 10 சதவீத முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பல ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டில்லியில், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான, 'நாஸ்காம்' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், பிரதமர் நரேந்திர மோதி பேசியதாவது:சமையல்காஸ் சிலிண்டர்கள் ஏற்கனவே, சந்தை விலையைவிட குறைவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

இதில், ஏராளமான குளறுபடிகள் நடந்தன. இதை தடுப்பதற்காகவே, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக மானியதொகையை செலுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்ததிட்டம், இந்தாண்டு துவக்கத்திலிருந்து வெற்றிகரமாக அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், 10 சதவீத முறைகேடுகளும், குளறுபடிகளும் தடுக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம்கோடி ரூபாய் அரசுக்கு
சேமிக்கப்பட்டுள்ளது. மொபைல்போன் மூலமாக நிர்வாகத்தை கையாளும் விஷயத்தில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். சர்வதேச நாடுகள், நம் நாட்டை பார்க்கும்கோணத்தை மாற்றி அமைப்பதற்கு தகவல் தொழில்நுட்ப துறையினர் உதவ வேண்டும்.

மொபைல் போன்களில் பயன் படுத்தப்படும், 'ஆப்ஸ்'சை உருவாக்க, அனைத்து தரப்பினரி டமும் ஆலோசனையை வரவேற்கிறோம். இதற்காக, My Gov என்ற இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது. நான் பிரதமரானபின் சந்தித்த பெரும்பாலான வெளி நாடுகளின் தலைவர்கள், சைபர் குற்றங்கள் தொடர்பாகத்தான் கவலை தெரிவித்தனர். நம் நாட்டுக்கு மட்டு மல்லாமல், சர்வதேச நாடுகளுக்கும் சைபர் குற்றங்கள் பெரும்சவாலாக உள்ளன. நம் நாட்டில், தகவல் தொழில் நுட்ப துறையில் சிறந்து விளங்கும் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர். எனவே, சைபர்குற்றங்களை தடுக்கும் வகையிலான தொழில் நுட்பத்தை நம் நாட்டு இளைஞர்கள் உருவாக்க வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாதுகாப்பதற்கான தொழில் நுட்பத்தை வடிவமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply