பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தலைவர் காதர்மொகிதீன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்

இந்தியயூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞர் அமைப்பான முஸ்லிம் யூத்லீக்கின் மாநில ஆலோசனை கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு காதர்மொகிதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் 2015-16-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஏராளமாக உள்ளன. சிறுபான்மையின இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற நயிமன்ஸில் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதில் கூறியுள்ளவாறு காரியங்கள் நடைபெறு மேயானால் நிச்சயமாக வரவேற்கக்கூடிய அம்சம் தான்.

நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசிய போது, முதல் முறையாக தனது மெüனத்தை கலைத்து அற்புதமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். மதத்தின்பெயரால் முட்டாள்தனமான கருத்துகள் கூறுவதை பிரதமர் என்ற முறையில் அனுமதிக்கப் போவதில்லை என்றும், மத அடிப்படையில் பாரபட்சம் காட்டவோ சட்டத்தை கையில் எடுக்கவோ யாருக்கும் உரிமையில்லை என்றும் கூயிருக்கிறார். அதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

Leave a Reply