கார்ப்பரேட் நிறுவனங்கள், பணக் காரர்களுக்காக ஆட்சி நடத்தவில்லை, ஏழைகளின் நலனுக்காகவே ஆட்சி நடத்துகிறோம், அவர்களுக்காகவே உழைக்கிறோம்.

நாடாளுமன்றம் பல்வேறு மாநிலங்களின் சங்கமம். இங்கு கட்சிகளின் நலன்களை விட மாநிலங்களின் நலன்கள் மட்டுமே பிரதிபலிக்கப்பட வேண்டும், . அதை உணர்ந்து உறுப்பினர்கள் செயல்படவேண்டும்.

1947 ஆகஸ்ட் 15ம் தேதிதான் இந்தியா உதயமானது என்று நான் எண்ணவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா உதய மாகிவிட்டது. பல்வேறு கட்சிகளின் சார்பில் அடுத்தடுத்து பதவியேற்ற பிரதமர்கள் அனைவரும் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றுள்ளனர். அந்தப் பணி இப்போதும் தொடர்கிறது.

ஜன் தன் திட்டம் பணக்காரர் களுக்கான திட்டமா? நிச்சயம் இல்லை. ஏழை, எளிய மக்களுக்கான திட்டம். இதன் மூலம் கோடிக் கணக்கான ஏழை குடும்பங்கள் வங்கிச் சேவையை பெற்றுள்ளன.

தூய்மை இந்தியா திட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வரையறுக்கப்பட்ட திட்டமா? இல்லை. சமானிய மக்களுக்காக தீட்டப்பட்ட சிறப்புத்திட்டம். இத்திட் டத்தில் நாடுமுழுவதும் 6 கோடி கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன. இவை உட்பட மேலும் பல்வேறு திட்டங்களை ஏழைகளுக்காகவே செயல்படுத்தி வருகிறோம்.

மத்திய அரசின் ஆக்கப்பூர்வ மான திட்டங்களில் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளும் கைகோர்த்து செயல்பட வேண்டும். மக்கள் நலத்திட்டங் களில் கட்சிப் பாகுபாடின்றி ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் நாடு முன்னேறும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக் காகவும் பணக்காரர்களுக்காகவும் நாங்கள் ஆட்சி நடத்தவில்லை. ஏழைகளின் நலனுக்காவே ஆட்சி நடத்துகிறோம், அவர்களுக்காகவே அதிகம் உழைக் கிறோம்.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அரசியலாக்க வேண்டாம். அந்த மசோதாவில் விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை குறைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருப்புப் பணமீட்பு விவகாரத்தில் அரசு அளித்த வாக்குறுதி காப்பாற்றப்படும்.

ஒரு காலத்தில் பாரதிய ஜனதா கட்சி இந்தி பேசும் மக்களின் கட்சி என்றும் உயர் வகுப்பினரின் கட்சி என்றும் கருதப்பட்டது. என்னை போன்றோர் உயர்பதவிக்கு வந்தபின் அந்த எண்ணம் முற்றிலுமாக மாறியுள்ளது.

கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் கூட பாஜக ஆட்சியில் உள்ளது. நாடு முழுவதும் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

ஜனநாயகத்தில் மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் ஒரு போதும் வெற்றிபெறாது. குஜராத் முதல்வராக இருந்தபோது சிறையில் தள்ளப்படுவேன் என்று அடிக்கடி மிரட்டப்பட்டேன். அந்த அச்சுறுத்தல்களுக்கு நான் ஒருபோதும் அஞ்சியது இல்லை

சிலர் தங்களின் தனிப்பட்ட கருத்துகளை பகிரங்கமாக வெளியிடுகின்றனர். அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரசுக்கு நிர்பந்தம் அளிக்கப் படுகிறது.

காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி அரசு குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் செயல்படும் . சென்னையில் நோக்கியா ஆலை மூடப்பட்டதற்கு காங்கிரஸ் அரசின்நிர்வாகத் திறமையின்மையே காரணம். அந்த ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க மத்திய அரசு தீவிரமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக் கும் தீர்மானத்தின் மீதான விவாதத் துக்கு பதில் அளித்துப் பேசினார்.

Leave a Reply