செல்போன் உற்பத்தியில் உலகளவில் பிரசித்திபெற்ற பின்லாந்து நாட்டின் நோக்கியா ஆலை, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில் 8 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

ரூ.1,800 கோடி முதலீட்டில் இயங்கி வந்த இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட செல் போன்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பெருமளவில் கொள்முதல் செய்துவந்தது.

இந்நிலையில், அந்தநிறுவனம், நோக்கியா வுடனான செல்போன் கொள்முதல் ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு முறித்துக் கொண்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 1–ந் தேதி அந்த நிறுவனம் மூடப்பட்டது. இதனால் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று டெல்லி மேல்சபையில் பேசியபோது பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டார்.

அப்போது அவர், ''சென்னை நோக்கியா ஆலை மூடப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பில்லை. அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் மத்தியில் இருந்தது. 25 ஆயிரம்பேர் வேலை இழந்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். மூடப்பட்டுள்ள நோக்கியா ஆலையை மீண்டும் திறப்பதற்கு பா.ஜ.க அரசு முயற்சிசெய்து வருகிறது'' என கூறினார்

Leave a Reply